vastu பணப்பிரச்சனை ஏற்பட வாஸ்து

பணப்பிரச்சனை ஏற்பட வாஸ்து

 

vastu பணப்பிரச்சனை ஏற்பட வாஸ்து
vastu பணப்பிரச்சனை ஏற்பட வாஸ்து

பணப்பிரச்சனை ஏற்பட வாஸ்து குறைபாடு காரணமா?.

 

 

மனித வாழ்வில் பணம் என்பது மிகமிக முக்கியமானது ஆகும். இன்று மக்கள் பணம் என்கிற தேவைக்காக வெளிநாடு மற்றும் வேளி மாநிலங்களில் வசிக்கின்றனர். இதனால் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்கின்றனர். சிலர் சொந்த ஊர்களில் குடும்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர்கள் தனியாக குடும்பம் தனியாக வாழ்க்கை நடத்தி கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் மாதத்தில் விடுமுறை இல்லாது எல்லா நாட்களும் பணத்திற்காக உழைக்கிறார்கள். எனது வாஸ்து பயணத்தில் கண்டுபிடித்த விசயமாக மனிதனுடைய குடியிருக்கக்கூடிய வீடு தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பேன்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு அதிக இடங்களும் தென்மேற்கு பகுதியில் குடும்பதலைவரின் படுக்கை அறை, வடகிழக்கில் படிக்கும் அறை, தென்கிழக்கில் சமையலறை, வடமேற்கில் கழிவறை மற்றும் மத்திய பகுதியில் வரவேற்பு அறை இது போன்ற அமைப்புகள் இருந்தால் வாஸ்து ரீதியான அமைப்பு என்பது 60 சதவிகிதம் நெருங்கி வந்து பண கஷ்டம் நீங்க துணை புரியும்.

 

பணக்கஷ்டம் வாஸ்து அமைப்புக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இல்லத்தில் வடகிழக்கு பூஜையறை இருந்து இதனால்
வடகிழக்கில் மூடிய அமைப்பாக மாறிவிடுவதுமற்றும் பூஜையறை குற்றங்கள். வடகிழக்கில் சாளரங்களே இல்லாத அமைப்பு
வடகிழக்கில் மிகப்பெரிய வெட்டப்பட்ட கிழக்கு சார்ந்த போர்டிக்கோ அமைப்புகள்.
வடகிழக்கில் மிக உயரமான மரங்கள்.வடகிழக்கில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் உயரமான கட்டிடம்.மற்றும் வடகிழக்கு காம்பவுண்ட் இல்லாத அமைப்பு.
தென்மேற்கு தெருபார்வையில் வீடுஅமைந்து விடுவது.தென்மேற்கு தாழ்வான போர்டிக்கோ அமைப்பு
தென்மேற்கில் பூஜையறை இருப்பது. தென்மேற்கில் மற்றும் வடமேற்கு தென்கிழக்கு உள்மூலை படியமைப்பு.
இல்லத்தில் உள் அல்லது வெளியே தென்மேற்கில் கழிவறை இருப்பது.
தென்கிழக்கில் கிழக்கு தவறான தெருக்குத்துகள்.வடமேற்கு வடக்கு தவறான தெருக்குத்துகள்.ஆக இப்படி
வாஸ்துவிற்கு மாறான கட்டிட அமைப்புகளை உருவாக்கும்போது பணப்பிரச்சனை என்பது கட்டிடம் கட்டும்போதே தொடங்கி விடுகிறது.