படுக்கையறைகளுக்கு வாஸ்து

படுக்கையறைகளுக்கு வாஸ்து

படுக்கையறைகளுக்கு வாஸ்து
படுக்கையறைகளுக்கு வாஸ்து

 

 

 

 

 

      நண்பர்களுக்கு இனிய வணக்கம். வாஸ்து அமைப்பில் மாஸ்டர் பெட்ரூம் என்று சொல்லக்கூடிய அது சார்ந்த வாஸ்து விளக்கங்களை உங்களுடைய கனிவான பார்வைக்கு இந்த பதிவின் வழியாக உங்களுக்கு வழங்குகின்றேன்.

நமது இல்லத்தின் வரவேற்பறையில் சோபாக்களை அழகாக நேர்த்தியாக போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் வீட்டினுள் அறைகளை குறிப்பாக மாஸ்டர் பெட்ரூம் என்று சொல்லக்கூடிய தலைமை அதாவது குடும்பத் தலைவர் தடுக்கக்கூடிய படுக்கையறை அமைப்பு என்பது கண்ட பொருட்களை அடைத்து வைக்கக் கூடிய ஒரு அறையாக இருப்பதை எனது வாஸ்து பயணத்தில் நான் பார்த்திருக்கின்றேன். ஆக வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் இல்லாத ஒரு அறையில் உறங்குகின்ற மனிதன் எப்படி அடுத்த நாள் சுறுசுறுப்பாக தனது அன்றாட நிகழ்வுகளை கவனிக்க முடியும் .உடலும் மனமும் நலம் பெற எளிமையான சில வாஸ்து சாஸ்திர அமைப்புகளை ஒவ்வொரு இல்லத்தின் படுக்கை அறைகளை உருவாக்கும்போது அற்புதமான வாழ்க்கை வாழ முடியும்.

பல இல்லங்களில் வீட்டுத் தலைவாசல் என்றது உச்ச பக்கத்திலோ அல்லது புதன் சார்ந்த பாதத்தில் இருந்தால் இல்லம் வீடு வாஸ்து பொருந்திய இல்லமாக இருக்கும் என்று தவறான ஒரு எண்ணத்தை வைத்திருக்கிற மக்களை பார்த்து இருக்கின்றேன் அந்தவகையில் ஒவ்வொரு அறையின் நுழையக்கூடிய வாசலும் உச்சதில் வரவேண்டும் குறிப்பாக படுக்கை அறைக்கு இந்த விதி மிக மிகப் பொருந்தி வர வேண்டும் என்று சொன்னால், ஒரு மனிதனின் 24 மணி நேரத்தில் அதிகபட்சம் ஓரிடத்தில் நிலையாக இருக்கக் கூடிய நேரம் என்பது படுக்கை அறையில் மட்டுமே அந்த வகையில் கிழக்கு பார்த்த படுக்கை அறைக்கு வடக்கு கிழக்கிலும், வடக்கு பார்த்த படுக்கை அறை வாசல் என்பது வடக்கு வடகிழக்கிலும் ,மேற்கு பார்த்த படுக்கை அறை கிழக்கு வாசல் என்பது வடமேற்கு சாந்த மேற்கிலும் ,தெற்கு பார்த்த அறைகளுக்கு தெற்கு வாசல் வைக்கும்பொழுது, தெற்கு சார்ந்த தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது .

.நன்றி நண்பர்களே, மீண்டும் ஒரு நல்ல வாஸ்து சார்ந்த கருத்துக்கள் வழியாக சந்திப்போம். நன்றி வணக்கம்.

error: Content is protected !!