படிகளுக்கு வாஸ்து விதிகள்

வீட்டினுள் புறங்களில் #மாடிப்படி அமைப்பு விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.

உள்படிகள் அமைக்கும் பொழுது முன்வாசல் பார்த்த அமைப்பில் படிகள் என்பது எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் முனை குத்தல் என்கிற விஷயம் ஏற்பட்டு #மனைக்குதோசம் ஆகிவிடும். அதேபோல படிகளுக்கு கீழாக #பூஜை அறைகளை அமைப்பதும் தவறு ஆகும். ஆனால் படிகளுக்கு அடியே கழிவறைகளை அமைத்துக் கொள்ளலாமா? என்று எனது வாஸ்து பயணத்தில் நிறைய மக்கள் #இணையதளங்கள் வழியாக படித்து விட்டு கேட்பார்கள். அதாவது படிகளுக்கு கீழே #பாத்ரூம் இருக்கக் கூடாது என்று படித்துவிட்டு கழிவறைகள் இருக்கலாமா? வேண்டாமா? என்பார்கள்.

என்னை பொருத்தவரை இல்லத்தின் உள்பகுதிகளில் ஒரு வரைமுறைகள் கொண்டு படிகளுக்கு அடியே கழிவறைகளை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த படி எந்த திசையில் இருக்கிறது என்பது முக்கியம். தவறான திசையில் படிகளுக்கு அடியே #கழிவறை அமைக்கும் போது திசை மூடம் என்கின்ற விஷயம் ஏற்பட்டு வாஸ்து தோசமாகிவிடும்.

அதேபோல பணிகளை உட்பகுதியில் அமைக்கும் பொழுது, சுற்றிவரும் அமைப்பாக அமைக்கக்கூடாது.ஆக படிகள் என்பது ஒரு பா வடிவமைப்பில் அமைப்பது சாலச் சிறந்தது. சுற்றுகளாக அமைப்பு ஏற்படுத்தும்போது, #ராகு #கேது என்று சொல்லக்கூடிய அமைப்புகளை வீட்டில் உட்புகும் அமைப்பாக மாறி விடும்.

படிகள் அமைக்கும் பொழுது எக்காரணம் கொண்டும் எந்த மூலையிலும் படிகள் இருக்கும் அமைப்பாக படிகள் அமைக்க கூடாது. படி என்பது ஒரு அறைக்கு ஒட்டிய அமைப்பாக இருப்பது மட்டுமே மிக மிக பலம் வாய்ந்தது. அதனைவிடுத்து கிழக்கில் அல்லது வடக்கில் அறையும் அமைத்து படிகளுக்கு தெற்கு புறங்களிலும், மேற்குப்புறங்களிலும், காலி இடமாக திறந்த அமைப்பான #varanda அமைப்பை ஏற்படுத்துவது மிக மிக தவறானது.

பொதுவாக படிகளை அமைக்கும் பொழுது கிழக்கிலிருந்து மேற்கு ஏறும் அமைப்போ அல்லது, வடக்கிலிருந்து தெற்காக ஏறும் அமைப்பாக வைப்பது சாலச்சிறந்தது.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp 9965021122
www.chennaivasthu.com