
ஒட்டியிருக்கும் வீடுகளில் இருக்கும் வாஸ்து தவறு நாம் குடியிருக்கும் வீட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா?
ஒருவருக்கு நல்ல வாஸ்துபடி நல்ல வீடு அமைவது என்பது மிகவும் சவாலான விஷயம் என்று தான் கூறுவேன். அதற்கு காரணங்கள் இருந்தாலும்,அதில் மிக மிக முக்கியமான ஒன்று பக்கத்து வீட்டமைப்புகள் நமக்கு எந்த வகையிலும் கெடுதல் ஏற்படுத்தாத வண்ணம் அமைய வேண்டும்.
வீட்டிற்கு நான்கு புறமும் காம்பவுண்ட் சுவர் அவசியம். அதிலும் பொதுவாக இல்லாமல் தனி சுற்றுச்சுவராக இருப்பது சிறப்பு. கிழக்கு மற்றும் வடக்கு பகுதி சுற்றுச்சுவர் பொதுவாக வைப்பது தவறு. பக்கத்து இல்லத்தில் இருப்பவர் அந்த பொது சுற்றுச்சுவரை சேர்த்து வீடோ அல்லது ஏதாவது ஒரு கட்டிடங்களை கட்டினால், உங்களுடைய வீடு அன்றுமுதல் வடக்கு முழுவதும் இடம் இல்லாத வீடாக மாறி சுவாசம் இல்லாத நிலைக்கு சென்றுவிடும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிடங்கள் வரும்போது அதனுடைய எடை முழுவதையும் உங்கள் வீடு தான் சுமைதாங்கி போல சுமக்க நேரிடும்.
ஒரு வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் பக்கத்து வீட்டமைப்பில் கிணறு, போர், சம்ப், கழிவறை, கழிவறை குழி, மாடிபடி இதுபோல அமைப்புகள் வருமானால், பெண்களின் உடல்நலம் கெடுதல், கணவன் – மனைவி உறவில் பிரிவு, திருட்டு, தீ விபத்து, போலீஸ் கேஸ் என இன்னும் பல பல பிரச்சனைகள் வரக்கூடும்.இதற்கு தீர்வு என்பது நமக்கென்று ஒரு சுற்றுச்சுவர் வேண்டும்.
வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் பக்கத்து வீட்டமைப்பில், கிணறு, போர், சம்ப, கழிவறைகள், கழிவறைகுழிகள், சமையலறை, மாடிப்படி, குடோன்கள் வருமானால், உங்களுடைய வீட்டில் ஆண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தொழில், பொருளாதாரம், குடும்ப உறவுகள், ஆரோக்கியம், சுய கௌரவம்,இதற்கு தீர்வு என்பது நமக்கென்று தனி காம்பவுண்ட் அமைப்பு வேண்டும்.
வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் பக்கத்து வீட்டமைப்பில் கிணறு, போர், சம்ப் போன்ற அமைப்புகள் வருமானால், நீங்கள் நாணயம் இழக்க நேரிடும், குடும்பத்தில் அவப்பெயர் ஏற்படும். கையிருப்பு மற்றும் சொத்துக்களை இழக்க நேரிடும். சில நேரங்களில் சொத்துகள் ஏலம் போகக்கூட நேரிடும்.இதற்கு தீர்வு என்பது நமகென்று தனி சுற்றுச்சுவர் வேண்டும். இல்லாமல் வீடு தோசமே.
பக்கத்து வீட்டில் உள்ள கிணறு அமைப்பு