அருகில் உள்ள வீடுகளின் வாஸ்து குற்றம் நமது வீடுகளுக்கு பாதிப்பு கொடுக்குமா?

Wells and sewage tank in neighboring houses
Wells and sewage tank in neighboring houses

பக்கத்து வீடுகளின் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டி போன்ற அமைப்புகள்  ஒரு வீட்டை பாதிக்குமா?

ஒரு வீட்டிற்கு அருகில் உள்ள பக்கத்து வீட்டில் உள்ள மிகப்பெரிய கிணறுகளும் கழிவுநீர் தொட்டிகளும் ஒரு சில தவறுகளை கொடுக்கும்.வீட்டிற்கு நான்கு புறமும் உள்ள இல்லங்களில் இதுபோல் இருக்கும் அமைப்புகள் நம்முடைய வீட்டிற்கு பாதிப்பு என்பது இருக்கும். ஒரு வீட்டில் தென்கிழக்கில் இருக்கும் கழிவு நீர் தொட்டி அதற்கு கிழக்கு புறம் உள்ள வீட்டிற்கு தென் மேற்கில் வரும்.

 

அதேபோல ஒரு வீட்டில் வடகிழக்கில் இருக்கும் கிணறும், ஆழ்துழாய் கிணறும், தண்ணீர் தொட்டியும், அதற்கு அருகே கிழக்கு புறம் உள்ள வீட்டுக்கு வடமேற்கில் வரும். இந்த இடத்தில் வீட்டில் சுற்றுச்சுவர் இல்லையென்றால் கட்டாயம் ஒரு வீட்டின் சரியான அமைப்பு மற்ற வீடுகளுக்கு தவறான அமைப்பாகி விடும்.
ஒரு வீட்டிற்கு மேற்கு பகுதியில் சுற்றுசுவர் இல்லாமல் இருப்பது மேற்கு புற வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி நமது வீட்டில் வடமேற்கில் பள்ளம் என்கிற அமைப்பை  ஏற்படுத்தி கெடுதல் என்கிற அமைப்பாகி விடும்.இதனால்  கிழக்கு புறம் உள்ள வீடுகளில் பணம் என்கிற நிகழ்வுகளில் கடன் என்கிற விசயத்தை கொடுத்து விடும்.
வீட்டில் கிழக்கு புறம் சுவர்கள் இல்லையெனில் நமது வீட்டின் கிழக்கு புற வீட்டின் கழிவுநுர் தொட்டிகளோ,அல்லது அஙாகு வடமேற்கில் உள்ள படி அமைப்புகளோ கழிவறை குளிக்கும் அறைகளோ மேற்கு புற வீடுகளுக்கு வடகிழக்கில் தவறான அமைப்பாக பேச ஆரம்பிக்கும். இதனால்  ஒரு குடும்பத்தில் உறவுகளில் பிரச்சினை வீட்டின் தலைவர் அல்லது தலைமகன் பாதிக்கும் சூல்நிலையை உறுவாக்கும். 

 

 

பக்கத்து வீடுகளின் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டி
பக்கத்து வீடுகளின் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டி

சுற்றுச்சுவர் சுவர் இல்லாத வீடுகளில்  என்றுமே பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.ஆகவே ஒரு வீட்டில் சுற்றுச்சுவர் என்பது  ஒருவருக்கு நாம் அணிந்துள்ள ஆடைகளை போன்றது. ஆகவே  மிகமிக அவசியமானது ஆகும்.  வீடு கட்டுகின்றோம் என்றால் வீட்டின் சுற்றுச்சுவரை உறுதி செய்துவிட்டு வுட்டு வேலைகளை செய்யுங்கள் வீடுகளில் வேலை துரிதமாக நடந்து முடிந்து விடும். தற்போது வரை சுற்றுச்சுவர் இல்லாத இல்லங்களுக்கு கூட நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு சுற்றுச்சுவரை அமைத்து கொள்வது நல்லது.கூடவே ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணை கொண்டு செய்வது தவறுகளுக்கு வழிவகுக்காது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)