நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

 

 

 

 

 

 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. மனித வாழ்க்கையில் அவருடைய குடும்பத்தை நடத்த பொருட்செல்வம் என்பது அவசியம். அந்த வகையில் ஒரு மனிதன் எந்த விதமான நோய்கள் இல்லாமல் இருந்தாலே அது அவனுக்கு அதுவே பெருஞ்செல்வம். இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அறிவியல் என்கிற சிற்பி இயற்கையை முழுமையாக செதுக்கிக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் மனித வாழ்க்கையில் ஆயுளை அதிகரிக்கும் மருத்துவ விஞ்ஞானம் என்பது எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது.ஆனால் அதற்கு இணையாக நோய்களின் தன்மையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாயில் மருத்துவமனைகள், ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு உறுப்புக்கும் சிறப்பு மருத்துவர்கள், மருந்துகள் மாத்திரைகள் ஊசிகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால் நோய்களின் தன்மை என்பது குறைந்தபாடில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். மனிதர்களுக்கு பலவிதமான காரணங்களால், பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நோய் மட்டும்தான் வரும் என்பது எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் கிடைத்த விசயம் என்று அடித்துக் கூற முடியும். அது சார்ந்த வாஸ்து தீர்வுகளை செய்யும் பொழுது அந்த இடத்தில் மீண்டும் அந்த நோய்க்கூறுகள் தலைதூக்காது என்பது உண்மை.

ஓரிடத்தை பார்க்காமலேயே ஒரு மனிதனுக்கு இந்த நோய் எதனால் ஏற்பட்டது, அதற்கு காரணம் அந்த இல்லத்தில் எந்தவித பாதிப்பு என்பதை எளிதாக கூறிவிட முடியும். ஆக நோய்களைப் பற்றி துல்லியமாக அறிந்து கொள்ள வாஸ்து பயணமாக அந்த இடத்திற்கு தான் செல்லவேண்டும் கிடையாது.

வயிற்றுப் பகுதியில் ஒரு நோய் தாக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது தென்கிழக்கு பாதிப்பு அடைந்த வீடு என்று கூறமுடியும். அதுவே மனிதர்கள் உடலில் கால் பகுதியில் ஒரு நோய் தாக்கம் இருக்கிறது என்று சொன்னால் வட மேற்கு. அதே மர்ம ஸ்தான பகுதிகள் மற்றும் இடுப்பு இடுப்பு பகுதிகளில் ஒரு நோய் தாக்கம் இருக்கும் என்று சொன்னால் அது தென்மேற்கு . கழுத்து மற்றும் தலை சார்ந்த பகுதிகளில் பாதிப்பிற்கு என்று சொன்னாளல் அது வடகிழக்கு, இப்படி ஒவ்வொரு பகுதியும் ஆராய்ந்து அது சார்ந்த வாஸ்து குற்றங்கள் என்ன என்று தெரிந்து தெரிந்தால் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இந்த இடத்தில் நான் கூறிக்கொள்வது என்னெவென்றால்,வீடு கட்டுவதில் ஆர்க்கிடெக்ட் ஐடியாக்களை விட்டுவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சொன்னால் இல்லத்தை சிம்பிளாக எந்தவிதமான ஆடம்பர டெக்கரேஷன் இல்லாமல் அமைக்கும் பொழுது அற்புதமான வாழ்க்கை வாழமுடியும். இதைத்தான் நம் முன்னோர்கள் சிறுகக் கட்டி பெருக வாழ் என்றார்கள்.

ஒருசில மக்கள் மிகப்பெரிய அளவில் கதவு எட்டு அடிகள் அகலத்தில் கதவு வைக்கிறேன் என்பார்கள். கதவின் சாஸ்திரமான தச்சுசாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால் 3அடி ஆறு அங்குலம் மிகாது வையுங்கள் எனகிறது.அதனை நான் சொல்லுவேன். ஆனால் வீட்டு உறுமையாளர் என்ன சொல்வார்கள் என்றால் நான் கதவுகளை ஜன்னல் இருக்கும் அமைப்பாக வைத்துக்கொள்கிறேன் என்பார்கள். நாம் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். இது அவர்கள் சார்ந்த கர்மா என்றுதான் விட்டுவிட வேண்டும். இந்த இடத்தில் ஒரு வீட்டிற்கு கதவு என்பது வாயைப் போல. ஜன்னல் என்பது கண் மற்றும் மூக்கை போல, இந்த இடத்தில் ஒரு மனிதன் வாயை அதிகம் இருந்தால் என்ன ஆகும்,நோய் கூறுகள் அதிகரிக்கும். இல்லத்தில் நோய்களின் தன்மையை அதிகரிக்கும் என்று வேதசாஸ்திரம் சொல்கின்றது. ஆகவே நீங்கள் ஒரு கதவு வைக்கும் பொழுது கூட நோயின் தன்மை அதிகரிக்கும் செயலை செய்யும். அது இல்லாமல் அமைப்பதே சாலச்சிறந்தது.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp: 9965021122
www.chennaivasthu.com
youtube: https://www.youtube.com/user/jagannathan6666