chennai vasthu

நோயற்ற நீடித்த வாழ்வு பெற வாஸ்து

வாஸ்து கேள்வி - பதில்கள்
வாஸ்து கேள்வி – பதில்கள்
  வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள். பழைய துணி, பேப்பர் இவற்றினை சேர விடாதீர்கள்.மாதம் ஒருமுறை அப்புறப்படுத்த வேண்டும்.
வீட்டில் விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காட்டிய பின்  வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகளைத் தவிர அனைத்து அறைகளுக்கும் சென்று மணியடித்து காட்டுங்கள்.
ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் தண்ணீர் புழக்கம் இருக்குமாறு  தினமும் தண்ணீர் கொண்டு காலையில் துடைத்து விடுங்கள். வேண்டும். அந்த இடத்தில் எடையுள்ள பொருட்களை வைக்கக் கூடாது.
 கன்னி மூலை, நைருதிமூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் பணப்பெட்டி பொருள் வைக்கும் இடமாக இருக்க வேண்டும்.
தென்கிழக்கு அக்னிமூலை அல்லது வாயு மூலை வடமேற்கு திசையில் கிழக்கு பார்த்து சமையலறை அமைக்க வேண்டும்.வீட்டில் வடக்கே தலைவைத்து  எக்காரணம் கொண்டும் படுக்கக் கூடாது. பூமியில் தெற்கே இருந்து வடக்கு நோக்கி மின்காந்த அலைகள் செல்கிறது. ஆகவே வடக்கே தலைவைத்து படுப்பதால் காலில் ஆரம்பித்துத் தலைவழியாக மின்காந்த சக்தி கடந்து செல்லும். இதனால் உடலின் இரத்தம் பயணவேகம் அதிகமாகி விரைவாக ரத்தம் பாய்ச்சப்பட்டு இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும்.
 வீடு கட்டும்பொழுது வடகிழக்கு மூலையில் (கட்), அதாவது மூலையை விட்டு, வீட்டுச்சுவரை மடக்கி கட்டுதல் வரவே கூடாது. கட்டிடம் செவ்வக  அல்லது சதுர வடிவில் இருக்க வேண்டும்.
 வாசலில் மணியோசை எழுப்பும்  மணியினை தொங்க விடுவது கெட்ட சக்தியை விரட்டும். ஆரக்கால்களையுடைய கப்பலில் இருக்கும்  சக்கரத்தையோ அல்லது வட்டவடிவ கடிகாரத்தையோ வீட்டின் உள்ளே வடக்குச் சுவரில் மாட்டினால் வீட்டுக்கு சக்தி கூடும்.
வீட்டு வாசலுக்கு உள்ளேயும் வெளியேயும் நேர் எதிரே மரமோ, கம்பமோ, தூணோ, கிணறோ, வாய்க்காலோ, உத்தரமோ இருக்கக் கூடாது.
 குழந்தைகள் மதிப்பும், மதிப்பெண்ணும் அதிகம் பெற்று வர அவர்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வடகிழக்கு பகுதியில் அமர்ந்து படிக்கச் செய்ய அதிக நன்மை பெறலாம்.வயதுப் பெண்கள் மற்றும் ஆண்கள் வடமேற்கு வாயுமூலையில் படுக்குமாறு செய்தால் அவர்கள் விரைவில் திருமணமாகும்.
நோயற்ற நீடித்த வாழ்வு பெற படுக்கையின் வடக்கில் மற்றும் கிழக்கில் அதிக இடம் விட்டு படுக்கையினை போட்டு தெற்கு அல்லது மேற்கே தலை வைத்துப் படுக்க வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காண வடக்கு, கிழக்கு திசை நோக்கி சென்று வரவோ அல்லது அமர்ந்து அத்திசையில் இருந்து வியாபாரம் பேச நன்மையாக இருக்கும்.