கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ

கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ வேண்டுமா?

கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ
கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ

உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ வேண்டுமா?

 

தந்தை பெரியார் என்பவர் ஆன்மிகவாதி என்று நிரூபிக்கும் செயல்காளாக அவர் வள்ளல் பெருமான் சொல்லிய திருவருட்பாவில் “சாதியிலே மதம்களிலே சாக்கடை சண்டையிலே கோத்திர குப்பையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகில்” என்று துவங்கும் இந்த பாடலை தான் தன்னுடைய குடியரசு இதழில் முதல் பாடலாக பதித்து இருந்தார் என்று இன்று எத்தனை உறுப்பினர்களுக்கு தெரியும் .
 
 
நம் சமயத்தில் சொல்லப்பட்ட விவரம்களில் பல புதிய சடங்குகள் மற்றும் வழிபாட்டில் மாறுதல்கள் பற்றிய அறியாமை மற்றும் பொதுவாக சமயத்தில் உள்ள அனைத்தையும் நாம் பகுத்தறிவோடு காண்கிறோம் என்று ஒதுக்கிய தள்ளி அவைகளின் தோஸம்களை பெறுகிறோம் என்றே சொல்லவேண்டும்.
ஆன்மாவில் பதியப்படும் தோஸம்களை பலவகையாக பிரிக்கலாம் .
வீட்டில் நாம் செய்வது வாஸ்து தோஷமாக மாறி உடல்வழியாக,மனவழியாக அடைவது ஒரு வகை எனவும்,கோவிலில் செய்வது பூதகனம்கள் வழியாக வருவது ஒருவகை எனவும்,இயற்கையை சார்ந்த செயல்களை செய்யும் பொழுது பஞ்சப்பூதம் வழியாக வருவது ஒருவகை எனவும் , வேத நூல்களில் சொல்லப்பட்டு இருப்பதை கவனிக்காமல் செய்வது இருள் உலகத்தின் தேவதைகள் மூலம் வருவது ஒருவகை எனவும் என்று பிரித்து சொல்லலாம்.
இப்படி பதியும் தோஸம்களுக்கு சோதிடம் மூலம் கணக்குகள் கிடையாது என்று முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
 
கோவிலில் அல்லது நம்முடைய வீட்டில் நாம் செய்யும் செயல்கள் பற்றிய விழிப்புணர்ச்சிவேண்டும் அல்லது செய்யாமல் இருக்கவேண்டும் என்றே நான் சொல்வது உண்டு.
ஆன்மிகம் என்ற பெயரில் பலர் அவர்கள் விருப்பம்போல செய்யும் செயல்களால் அவர்களுக்கு தோஸம்கள் ஏற்படுகின்றது.பலருக்கு ஆன்மிகம் என்பது என்ன ? என்றே தெரிவது இல்லை என்றே சொல்வேன். உயிரின் மூலத்தை தேடி செல்வதே ஆன்மிகம் என்று சித்த நூல்கள் சொல்கிறது.
மேலும் ஆன்மிகப்பாதையை பலவரியாக பிறிது செல்வதை
இன்று அவரவர் அவர்களுக்கு தகுந்தாற்போல வகித்து கொண்ட விதம்கள் ஆகும்.
 
ஆன்மிக பாதை என்று தவறான பாதையில் செல்பவர்கள் தான் அதிகம் என்பேன்.ஒரு செயலை தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஆன்மாவில் புண்ணிய பலம் பாப பலனும் எப்படி ஏற்படுகிறதோ அதுபோல தோஸம்களும் ஏற்படும் என்று நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒரு முறை நண்பர்களுடன் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்து ஈசனின் அருள்பெற்ற வாதவூர் என்றதிருவாதவூர் கோவிலில் சிவபெருமானின் தரிசனத்திற்க்காக சென்ற வழிபட்டு வெளியே வந்த பொழுது சில நபர்கள் அன்னதானம் செய்து கொண்டு இருந்தார்கள்.
தொன்னையில் அவர்கள் கொடுத்த உணவுகளை பலர் வாங்கியபடி நின்றார்கள்.நான் அவர்களை கடந்து வந்துவிட்டேன்.சிறுது நேரம் கழித்து வந்த நண்பர்கள் கைகளில் அந்த உணவு தொன்னையுடன் வந்தார்கள்.
அவர்கள் என்னிடம் உணவு அருமையாக இருக்கிறது கொஞ்சம் எடுத்து கொள்ளுங்கள் என்றபொழுது நான் அவர்களிடம் தாங்கள் வாங்கியது பிரசாதமா? அல்லது தர்மப்பொருளா? என்றதும் அவர்களுக்கு சரியாக என்னுடைய கேள்வி புலப்படவில்லை என்று அவர்கள் முகம் தெரிவித்தது.
நான் அவர்களிடம் மீண்டும் கோவிலின் உள்ளே அம்பாளுக்கும் பெருமானுக்கும் உணவுகளை படைத்தது அதை மற்ற எல்லோருக்கும் தருவது பிரசாதம் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாசல் முகப்பில் நின்று அவர்கள் கொண்டு வந்த உணவுகளை பிரித்து தருவது அவர்களுக்கு தானமும் நமக்கு தர்ம பொருளாகவும் என்று விளக்கம் கூறியபொழுது ஒரு நண்பர் என்னிடம் இது எவ்வகை சேர்ந்தது என்று எனக்கு தெரியாது மேலும் அவர்கள் சாமிக்கு படைத்தது விட்டு தருகிறார்களா ? என்பதும் தெரியாது என்றும் இதனால் பலன் என்ன? என்றார்.
 
கோவில் பிரசாதமாக நாம் உண்பது பாக்கியும் நமது ஆன்மாவில் இவைகளின் ரஸம்கள் மேன்மையான சக்திகளையும் நல்ல பதிவுகளையும் நம் ரத்தத்தில் சேர்க்கும் அதே வேளையில் நாம் தர்மப்பொருளை உணவாக உண்ணும் பொழுது அவர்களின் பாவத்தையும் சாபத்தையும் தோஷத்தையும் சேர்த்து உண்கிறோம்.
நான் அம்பாள் உபாசகரிடம் பழகிய காலத்தில் அவர் அடிக்கடி என்னையும் அவர்களை தேடி வருபவர்களையும் உணவுகள் கொடுத்ததும் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு யாசிப்பவர்களுக்கும் உணவு தானம்கள் செய்தும் வருவார்.அன்று அவர் செய்தது பற்றிய விழிப்பு எனக்கு இல்லை.நானும் அவர்களுடன் செல்வேன் சில உதவிகளையும் செய்வேன்.ஆசான் அகத்தியர் அருளால் அன்னதானத்தின் சில கோட்பாடுகளும் வழிகாட்டுதல்களும் புரிந்து கொண்டு பின்பு தான் பிறருக்கு சொல்ல முடிந்தது.
ஒரு மனிதனின் முழு கர்மமும் அவனின் வருமானத்தில் உண்டான உணவுகளில் தான் வசப்பட்டு இருக்கும் என்பதால் தான் எல்லா மதமும் அன்னதானத்தை பற்றி நமக்கு சொல்லி உள்ளது. இங்கே நாம் தான் அதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
 
அன்னமயகோசத்தை உடைய மனிதனுக்கு அன்னதானம் செய்வது மிக புண்ணியம் என்பது உண்மை.அதேவேளையில் அன்னத்தால் நாம் பெறுவது அவர்களின் தர்மமும் சாபமும் பாபமும் என்பதும் உண்மை.
அவ்வை பிராட்டியின் கூற்றுப்படி நல்லவர்களிடமும் நல்ஆசிபெற்றவர்களிடமும் நாம் உணவு வாங்கி உண்பது என்பது நம் ஆன்மாக்களுக்கு மேன்மையாகும் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
 
கோவில் வாசலில் தானம் தரும் அவர்கள் கோவிலில் படைத்தார்களா அல்லது சமைத்தவுடன் அப்படியே தருகிறார்களா என்று குழப்பம் வேண்டாம் .  தவிர்த்தால் நல்லது அல்லது தெரிந்து பெற்றுக்கொண்டால் மிகவும் நல்லது என்பேன்.
 
மீண்டும் நல்ல பதிவோடு சந்திப்போம்.
ஜோதிட tamil,
தமிழ் ஜோதிடம் tamil astrology jothidam,
தமிழ் ஜோதிடம் tirunelveli tamil nadu,
ஜோதிடம் video ,
ஜோதிடம் 7 veedu,
நாடி ஜோதிடம் video ,
ஜோதிடம் wikipedia,
ஜோதிடம் youtube,
ஜோதிடத்தில் 12 வீடுகள்,
1 எண் ஜோதிடம்,
ஜோதிடம் 2019,
குமுதம் ஜோதிடம்,
எண் ஜோதிடம்,
ஷெல்வி ஜோதிடம்,
ஜோதிடம் 360,
புலிப்பாணி ஜோதிடம் 300 ,
குடும்ப ஜோதிடம்,
கைரேகை ஜோதிடம் pdf,
புலிப்பாணி ஜோதிடம் pdf,
ஜோதிட ragasiyam ,
ஜோதிடம் sani peyarchi,
ஜோதிடம் thirumana porutham,
நாடி ஜோதிடம், video
ஜோதிடம் wikipedia,
ஜோதிடம் youtube,
ஜோதிடம் 2019,
சார ஜோதிடம்,
 
error: Content is protected !!