நாகம் சம்பந்தப்பட்ட வழிபாடு

ஆன்மீக இரகசியம்:

நாகம் சம்பந்தப்பட்ட வழிபாடு இந்து மதத்தில் முக்கியமாக உண்டு. நமது பூர்வஜென்ம வினையை பொருத்து நல்ல புத்தியும், அல்லது கெட்ட புத்தியும் திணித்துத் தான் இறைவன் அனுப்புகின்றார். அந்த வகையில் மனிதனும் இல்லாது மற்ற உயிரினங்களாக இல்லாது, இரண்டும் கலந்த நிலையில் இருக்கக்கூடிய இறை உருவங்கள் சில விஷயங்களில் நம்மை வாழ வைக்கின்றன. அப்படிப்பட்ட அவதாரத்தில் மிக மிக முக்கியமானது சரபேஸ்வரர் மூர்த்தம் ஆகும். இதன் உருவ அமைப்பு என்பது மனித உடலாக, பத்ரகாளி , பிரித்தியங்கரா என்ற இரு இறக்கைகளாக சரப முகம் யாழின் தொடை மற்றும் கால். இப்படிப்பட்ட உடலோடு பூமியையே தனது இறக்கைகளால் மூடினார். நரசிங்கத்தின் ரத்தவெறியை மாற்றி அவருக்கு சுயநினைவு வரச்செய்தார் . அப்படிப்பட்ட சரப மந்திரம்தான் ஆகம சாஸ்திரத்தில் காப்பு மந்திரமாக இருக்கிறது . இதனை கிபாபுகட்டுதல் நிகழ்வில் சிவாச்சாரியார்கள் உபயோகிக்கின்றனர்.அந்த வகையில் எவரொருவர் கீழ்க்கண்ட மந்திரத்தை காலையும் மாலையும் 27 முறை ஜெபித்து வருகிறார்களோ அவர்களை யாராலும் ஜெயிக்க முடியாது. கஷ்டங்களும் கொடுக்கமுடியாது . அந்த மந்திரம் என்பது “”

சாலுவேசாய வித்மஹே பட்சி ராஜாய தீமஹி தன்நோ சரப ப்ரசோதயாத்””

வாஸ்து இரகசியம்:

ஒரே பெயரில் இரண்டு இடங்கள் இருந்தால், அந்த இரண்டு இடங்களில் தனித்தனி கட்டிடங்கள் அமைத்து தனித்தனி சுற்றுச்சுவர் அமைத்து செப்டிக் டேங்க் என்கிற கழிவுநீர் தொட்டி இரண்டு பாகங்களிலும் தனித்தனியாக வரும்பொழுது நிச்சயமாக அந்த கட்டிடம் இருக்கும் இடத்தில் தோஷத்தை கொடுக்கும்.அது பணத்தில் பாதிப்பு கொடுப்பதாக இருக்கும்.