தொழில் நடத்த வாஸ்து/தொழில் செய்வதற்கு ஏழாம் பாவம்

வாஸ்து_ரகசியம்:

தொழில் நடத்த வாஸ்து ரீதியாக இல்லத்தில் அல்லது, கடையில் தெற்கு மேற்கு பகுதிகளில் திறப்புக்கள் இருக்கக்கூடாது. ஆனால் ஒரு சில கடைகளில் தென்மேற்கு தெற்கு மேற்கு திறந்திருக்கும். அங்கு சிறப்பாக தொழில் நடக்கும். ஒரு கட்டத்தில் ஜப்தி என்ற நிலைக்கு சென்றுவிடும்.

ஜோதிட ரகசியம்:

தொழில் செய்வதற்கு ஏழாம் பாவம். வியாபாரம் திரும்பத் திரும்ப நடக்க வேண்டும் என்றாலும் ஏழாம் பாவம் தான். மனைவி சார்ந்த பாவம் ஏழாம் பாவம் தான். மக்கள் உங்களை தேடி வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னால் மனைவி என்கிற பாவம் அடி பட்டுவிடும். மனைவி எப்போதும் உங்களோடு கொஞ்சி குலாவி அன்போடு இருக்க வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு வியாபாரம் அடிபட்டுவிடும்.அதே மனைவியை ஏழாம் பாவத்தின் காரகமான தொழில் சார்ந்த காரகத்துவம் ஏற்படுத்தி கொடுத்தால் பணமும் வரும். உறவிலும் இருக்கும். ஆனால் எது வேண்டும் என்பது ஒருவரின் கைகளில் தான் உள்ளது. அவரின் மனைவி கையில் கிடையாது. ஒருவரின் பிறப்பு சார்ந்த ஜாதகத்தில் தான் என்ன யோக்கியதை இருக்கிறதோ அது மட்டும் தான் நடக்கும்.