வாஸ்துவில் அதிர்ஷ்டம்

நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா

தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா

நமது தொழில் வளர்ச்சி் பெறுக, நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட,நம்முடைய தொழில் விரிவாக்கம் செய்ய, அதாவது மேற்கூறிய எண்ணங்களே நமது தொழிலை விரிவாக்கம் செய்ய நேரம் வந்து விட்டது என்று அர்த்தம் ஆகும்.

உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கான நேரம் எது என்ற கேள்வி எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் விரிவாக்கத்திற்கான நேரம் வந்து விட்டதாகவே அர்த்தம். தொழில் விரிவாக்கம் என்பது எப்போதுமே உங்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

உங்கள் உறவு வட்டத்தை விரிவாக்குவது, உங்கள் வாடிக்கையாளர் வட்டத்தை விரிவாக்குவது, கொடுக்கப்பட்ட பணிநேரத்திற்குள்ளாகவே உங்கள் அலுவலகத்தின் செயல்திறனைப் பெருக்குவது, இவையெல்லாமே விரிவாக்கத்தின் அம்சங்கள்தான்.
தொடர்புகள் பெருகட்டும்:
பல வட்டங்களிலும் தளங்களிலும் அறியப்பட்டிருப்பது, உங்கள் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கிக் கொண்டேயிருக்கும். புதிய மனிதர்களை அறிமுகம் செய்து கொள்வது போதாது. அந்த அறிமுகங்களின் மனதில் நிற்கும்படியாக நீங்கள் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

எங்காவது எப்படியாவது அறிமுகங்களைத் தொடருங்கள்
எங்காவது பயணத்தின்போதோ ஒரு பொது நிகழ்ச்சியின் போதோ புதிய அறிமுகம் ஒன்று கிடைத்திருக்கும். உங்கள் தயாரிப்பு குறித்தோ சேவை குறித்தோ அவர் ஆர்வம் காட்டியிருப்பார். சந்திப்பு முடிந்து சில நாட்களில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருப்பீர்கள், ஆனால் முடியாமல் போயிருக்கும்.
அந்தத் தொடர்பு அப்படியே அறுபட்டிருக்கும். அத்தகைய தொடர்புகளைப் புதுப்பிக்க முயலுங்கள். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போன பல வாய்ப்புகள் மிக முக்கியமானவையாக இருக்கலாம்.
விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்துங்கள்.

 

இணையத்தில் உங்கள் நிறுவனம் குறித்து செயல்படுவது, வாடிக்கையாளர்களுடன் மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்வது ஆகியவை எளிதாகவும் விரைவாகவும் வாடிக்கையாளர்களை எட்ட வழி செய்யக் கூடியவை.
அதற்கான பயிற்சிகளை நீங்களும் உங்கள் அலுவலகத்தினரும் இந்நேரம் பெற்றிருப்பீர்கள். அத்தகைய தகவல் தொடர்பில் புதுமைகளைப் புகுத்தி நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முயலுங்கள்.
தனி மனித நிலையில் உங்கள் நிறுவனத்தின் பெயருக்கு நடமாடும் நினைவூட்டலாக இருங்கள். தங்கள் குடும்பப் பெயரின் ஒரு பகுதியையே நிறுவனத்தின் பெயராகக் கொள்வது ஒரு வகை. டாடா பிர்லா நிறுவனங்கள் அப்படித்தான். நிறுவனத்தின் பெயரைத் தங்கள் பெயரோடு சேர்த்து பிரபலப்படுத்தும் தொழிலதிபர்கள் தென்னாட்டில் நிறைய உண்டு. இந்த இரண்டுமே நல்ல உத்திகள்.
ஒவ்வொரு விடியலையும் விரிவாக்கத்தின் வாய்ப்பென்று உணருங்கள்.

 

 

error: Content is protected !!