ஆயாதி பொருத்தம்

தொழிலில் மிகப்பெரிய வெற்றியை யோகத்தை கொடுக்கும் வாஸ்து

வாஸ்து கேள்வி - பதில்கள்
வாஸ்து கேள்வி – பதில்கள்

மிகக் குறைந்த வயதில் தொழிற்சாலைகளை அமைத்து தொழிலில் மிகப்பெரிய வெற்றியை யோகத்தை வாஸ்து கட்டிடங்கள் கொடுக்குமா?

கனவுத் தொழிற்சாலை என்று சொல்லக்கூடிய திரைப்படத்துறையை சார்ந்த சினிமா துறை, சின்னத்திரையில் நடிகை மற்றும் ஒளிபதிவாளர்….. குடும்ப தொழில் நிறுவனத்தில் செயல் இயக்குநர் மற்றும் வேறு தனியார் கூட்டு நிறுவனத்தில் டைரக்டர்.. இப்படி பலமுக தன்மையாக மிக மிக குறைந்த வயதில் தொழிலில் வெற்றிநடை போடும் பெண் ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு என்பது இல்லத்தின் வழியாக வாஸ்து வழங்குமா? அதாவது முதல் தலைமுறை இளம் வயது தொழிலதிபர் உருவாகுவாரா? ஒரு இளம் தொழிலதிபரை வாஸ்து உறுவாக்குமா? .
ஒரே பணியை திரும்ப திரும்ப செய்யும் மனிதர்ககளை பார்த்து இந்த வேலை உங்களுக்கு பிடித்துக்கொண்டு செய்கிறிர்களா என்றால் இல்லை என்கிற பதிலைத்தான் சொல்லுவார்கள்.
ஒரு சில மக்கள் மட்டும் அதிர்ஷ்டகரமான அமைப்பின் காரணமாக தங்கள் மனதுக்குப் பிடித்த வேலையில் முழுமையாக ஈடுபட்டு, அதில் இறங்கி வெற்றி பெறுகின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் என்னைப் பொருத்தவரை.இதற்கு காரணம் முழுக்க முழுக்க அவர்களுடைய இல்லத்தின் அமைப்பு மற்றும் வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும், இல்லத்தில் இருக்கும் வாஸ்து நிலைகொண்டு அவரவர் தொழிலில் சாதிக்கும் அமைப்பை பெறுகிறார்கள்.

எந்தத் தொழிலுக்கு எந்த தொழிலுக்கு எந்த திசையில் வீடு வாசலில் குடியிருந்தால் நன்றாக இருக்கும். அதே போல நாம் செய்கின்ற தொழிலுக்கு எந்த கிரகங்கள் துணை செய்யும், அது சார்ந்த வழிபாடுகளும், வாஸ்து சார்ந்த திசைகளின் பொருத்தங்களும் துணை செய்யும்விதமாக விதமாக இல்லத்தை அமைக்கும் பொழுது நிச்சயமாக வீடுகள் துணை புரிந்து வாழ வைக்கும். இதனை தெளிவாக அறிந்துவிட்டால், அதற்கேற்ற திசை அமைப்பை சரிசெய்து செய்யும் தொழிலை சுற்றுலா போவது போல போல எளிமையாக தொழிலில் சாதிக்கலாம்.
அந்த வகையில் கனவுத் தொழிற்சாலை என்று சொல்லக்கூடிய திரைப்பட தொழில்நுட்ப துறையில் எண்ணற்ற தொழில்நுட்ப பிரிவுகள் இருந்தாலும், பிரதானமான துறையாக கருதப்படுவது நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு துறை ஆகும்.
புகைப்படம், வீடியோ மற்றும் நடிப்பு போன்ற துறைகளில் ஒருவர் புகழ்பெற வேண்டும் என்றால் ஒரு இல்லத்தில் வடமேற்கு திசையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.ஆக இல்லத்தில் வடமேற்கு திசையை கணக்கில் எடுத்துக் கொண்டு கூர்ந்து அமைக்க வேண்டும்.

ஜோதிட ரீதியாகவும்,ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் ராகு கிரகம் மற்றும் சனிகிரகம் மிகப்பலமாக இருந்தால் திரைப்பட துறையில் கொடிகட்டி பறப்பார்கள்.
ஒருவர் திரைத்துறையில் பிரபலம் ஆகவேண்டும் என்றால் ஒரு இல்லத்தில் வடமேற்கு திசையில் வாஸ்து தவறுகளை வைத்துக்கொண்டு ஆவது என்பது கடினமான செயல் ஆகும்.அல்லது மிகப்பெரிய வடமேற்கு தவறுகள் இருந்தாலும் அவர்களின் சொந்த வாழ்க்கை சூனியமாகி வாழவைக்கும்.ஆனால் அதனை இல்லாமல் வாழ வேண்டும் என்றால் வாஸ்து வேண்டும்.
திரைப்பட துறைக்கு நவகிரகங்களில் சுக்கிரனின் நிலை என்பது அதிமுக்கியமானது. சுக்கிரன் ஜாதகத்தில் பலம் பெற்றவராக அமைந்தால் மட்டுமே கலைகளில் சிறந்தவர்களாக, பேரும் புகழும் அடையமுடியும். அப்படி ஜாதக கொடுப்பனை ஒரிசா பகுதிகளுக்கு மட்டும் இருக்கிறது என்று சொன்னால் கிரகத்தின் பலன் குறைந்து இருப்பதாக சொன்னார் இல்லத்தை வாஸ்தவத்தில் வடமேற்கு சரியாக பணி செய்யும் இடமாக இருக்கும் பொழுது சினிமா துறையில் வெற்றி பெற முடியும்

புதுமையான சிந்தனையும், வித்தியாசமான அணுகுமுறைகளையும், புத்தி கூர்மையையும் ஞாபகசக்தியும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே மிகச்சிறந்த ஓளிப்பதிவாளராக நடிகராக விளங்க முடியும்.ஆழ்ந்த புத்தி மற்றும், ஆழ்ந்த புத்தி கூர்மை, நிதான தன்மை, கலை ஆசி தந்து மிகசிறந்த கலைஞனாக விளங்க சரஸ்வதி தேவியாகிய ராஜசியாமளா தேவியின் அருளும் வேண்டும்.

மேலும் பொது காரகங்களான ஆத்ம சூரியன், மனோ காரகன் சந்திரன், மறைஞான அறிவை கொடுக்கும் கேது, தொழில் காரகன் சனிபகவான், தொழில் நுட்ப அறிவு, விரைந்து செயல்படுதல், திட காரகனான செவ்வாய் கெட்டு விடாமல் பலமுடன் இருப்பது, தொழிலில் நீண்ட நாள் நிலைத்து நின்று பெரும் செல்வம் பெற்று பேரும் புகழும் ஆக வாழ கூடவே வாஸ்து வேண்டும்.

ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி வேண்டும் என்றாலே, பொழுது போக்கு, ரசனை, கலைகள், விளையாட்டு, இசை, கேளிக்கை, சினிமா, சின்னத்திரை, வலைபதிவுகள், கேளிக்கை விடுதி, கவர்ச்சி, மயக்குதல், கற்பனை கலந்த உணர்வு, இயற்கை அறிவு, படைப்பாற்றல் மற்றும் காதல் போன்ற எண்ணற்ற மனித ரசனைக்கு தேவையான விசயங்கள் ஒரு இல்லத்தில் நடக்க வேண்டும் என்றாலே வடமேற்கு திசை வாஸ்து என்பது வேண்டும். மற்றும்
ஒருவர் கலை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தென்கிழக்கு வாஸ்து விதிகளை பெற்றிருக்க வேண்டும்.

அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருந்து ஏங்குவதைவிட அவரவர் இல்லங்களை வாஸ்து பலம் வாய்ந்த தொடர்பை ஆராய்ந்து அமைத்து கொண்டால்தான் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டாலும் கோடீஸ்வர யோகம் பெறலாம்.

error: Content is protected !!