பழைய இல்லங்கள் விற்பனை வாஸ்து

தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா?

பழைய இல்லங்கள் விற்பனை வாஸ்து
வீட்டின் மேற்கு தெற்கு இடங்கள்

 

 

 

 

 

 

    சில வாஸ்து நிபுணர்களும், ஒரு சில வாஸ்து புத்தகங்களிலும் ஒரு இல்லத்திற்கு வடக்குப் புறத்தில் மற்றும் கிழக்கிலும் இருக்கக் கூடிய இடங்கள் விற்பனைக்கு வரும்போது நீங்கள் வாங்கலாம் என்றும், ஒரு இல்லத்தின் மேற்குபுறத்திலும் தெற்குப் புறத்திலும் எக்காரணம் கொண்டும் ஒரு காலி இடத்தை வாங்கக் கூடாது என்றும் எழுதியிருக்கிறார்கள். கூறிவருகிறார்கள்.
இந்த இடத்தில் எனது பதில் என்ன என்றால், ஒரு சூழ்நிலைக்கு தகுந்தாற் போல வாங்க வேண்டும் என்று தான் சொல்லுவேன். அதனைவிடுத்து வாஸ்து விதிகள் பின்பற்றாது வாங்கலாம் என்று சொன்னால் மிகவும் தவறாகிவிடும். அதாவது வாங்கக்கூடிய இடம் அல்லது மனை ஒரு கட்டிடமாக இருக்கும் பொழுது தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். அங்கு இருக்கக்கூடிய தவறுகளை வாஸ்துவின் விதிகளுக்குட்பட்டு அமைப்பது சாலச் சிறந்தது. காலி மனை இருக்கின்ற பட்சத்தில் உடனடியாக ஒரு கட்டிட வேலையை தொடங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். இல்லை என்று சொன்னால் வாங்குவது என்பது தவறு.அங்கு ஏற்கனவே கட்டிடம் இருந்தாலும் இந்த கட்டிடத்தை இணைக்கும் போது வாங்கி கொள்ளலாம்.
ஒரு இடத்தை வாங்க கூடிய அளவிற்கு நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்று சொல்லும் பொழுது ஒரு காலி இடத்தில் ஒரு சிறிய கட்டிடத்தில் ஏற்கனவே உங்கள் மனை இருக்கின்ற உயரத்திற்கு ஒரு கட்டிடம் ஏற்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கிய பொழுது இதற்கென்று ஒரு தனி சுற்றுச்சுவர் ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

இந்த இடத்தில் விலை உயர்ந்த இடங்கள் ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை அல்லது, பிரிக்கக்கூடிய ஒரு தொழிற்சாலை அமைப்பு ஒரு தொழிற்சாலை விரிவுபடுத்த இப்பி என்று சொன்னால் ஒரு 100 அல்லது 200 அடிக்கு தொழிற்சாலை இருக்கிறது என்று சொல்லும் போது அந்த தொழிற்சாலையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 அடிக்கு மேலாக இருக்கின்ற பொழுது தெற்கு பகுதி மேற்கு பகுதியிலும் நீங்கள் அதே 50 அளவிற்கு விரிவாக்கம் செய்வதற்காக வாங்கிக்கொள்ளலாம்.
மீண்டும் வேறொரு சார்ந்த கருத்துக்களை சந்திப்போம் நன்றி வணக்கம்.

vastu consultant in madurai,vastu consultant in tamilnadu,vastu consultant in salem,vastu consultant in Tiruppur,vastu consultant in trichy,vastu consultant in chennai,vastu consultant in coimbatore,vastu in Thondamuthur,

 

error: Content is protected !!