நல்ல தெருகுத்து மற்றும் தவறான வருவதை எவ்வாறு தெரிந்து கொள்வது:
ஒரு வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு தெருகுத்து என்பது மிக
உன்னதமானது.இது போல் தெருகுத்து வருமானால் அவர்களால் அவர்களின் வருமானம் என்பது மூலம் 25% உழைக்காமலே கிடைக்கும் .
தென்கிழக்கில் தெற்கு தெருகுத்து:
இது போல தெருகுத்து ஒரு வீட்டிற்கு வருமானால், அவர்கள் செய்யகூடிய தொழிலுக்கு நிறைய கூட்டம் வந்து செல்வார்கள். இதனால் வருமானம் பெறுகும்.
வடமேற்கில் மேற்கு தெருகுத்து:
இது போல தெருகுத்து உள்ள இடத்தில் ஒருவரது வீடு அமைந்தாலும், தொழில் நிறுவனங்கள் அமைந்தாலும் உழைப்புக்கு மேல் 40% பலன்களை கொடுக்கும். இது போல தெருகுத்து, தெரு பார்வை அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைவதில்லை, காரணம் இந்த தெருகுத்தை பற்றிய முழு விவரம் ஒரு சில வாஸ்து நிபுணர்கே தெரியும் .ஆக தெரியாது ஒருஇடம் வாங்குகிறிர்கள் என்றால் தவறான இடத்தை உங்கள் தலையில் இட விற்பனையாளர்கள் ஒன்றும் தெரியாது போல கட்டி விடுவார்கள்.
வடமேற்கு – வடக்கு
தென்கிழக்கு – கிழக்கு
தென்மேற்கு – தெற்கு
தென்மேற்கு – மேற்கு
இந்த நான்கு பகுதியிலும் தெருகுத்து தெருபார்வை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். இவைகள் வாழ்க்கையில் பணத்தை மற்றும் உயிரை காவு வாங்குவது போல ஆபத்தானவைகள்.
இடம் வாங்கும்போதே அவர்கள் எந்த காரணத்திற்காக விற்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் .விற்பனை செய்பவரின் தகுதி என்ன என்று ஆராய்ச்சி செய்து வாங்கும் போது நன்மை பயக்கும்.
ஒரு தவறான இடம் பலவகையான முறைகளில் நம்மை காப்பாற்றும். ஆதாவது வீடு கட்டும் போது பல முறை தடைகள் ஏற்படும்.
தொழில் நஷ்டத்திற்கு சென்று விடும் ,அல்லது நஷ்டபடுத்தி விடும்.
ஜாமீன் ,கோர்ட் ,கேஸ் ,போன்றவை திடீர் என்று ஏற்படும்.கணவன் மனைவியின் உறவில் விரிசல் ஏற்படும்.ஆண்கள் விபத்தில் சிக்கிகொள்வதும்,
கிட்ணி ,பித்தப்பை ,முதுகுதண்டுவடம் ,பெண்களுக்கு கற்பப்பை போன்ற இடங்களில் பிரசனை ஏற்படும் .வயது வந்த ஆண் ,பெண் ,காதல் திருமணம் செய்து கொள்வது.மதம் மாறிய திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள்.
வேலையில் மாற்றம் , பணியிடை மாற்றம் .ஆண்களுக்கு இடது காலிலும் ,பெண்களுக்கு இடது கையிலும் முறிவு ஏற்படும் .இதய பிரச்சனை,ஸ்டோக் , பிரஷர்.இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது என்றாலே வாஸ்து சார்ந்த பரிசோதனை செய்து கொள்வது நலம்.
vastu for road hitting