மனிதன் மிகப் பெரிய திறமை வாய்ந்தவன் மற்றும், பேராற்றல் மிகுந்தவன், மகா வல்லமை படைத்தவன் என்று யார் கூறினாலும், சாஸ்திரங்கள் எடுத்துரைத்தாலும் தன்னை சுற்றியுள்ள இயற்கையை மீறிய வல்லமை படைத்தவன் கிடையாது.
மனித மூளையில் உள்ள மெல்லிய நரம்புகளில் உருவாக்கினார்களோ, மனிதர்கள் உலகத்தை பார்க்க சூரியன் என்கிற சக்தி மூலமாக வெளிச்சத்தை யார் உருவாக்கினார்களோ, அந்த சக்திதான் இயற்கை. அந்த சக்திதான் பூமியை வேகமாக சுழலச் செய்கிறது. கடலை கொந்தளிக்க செய்கிறது. கால நேரங்கள் என்கிற பருவ நிலையை நிர்ணயிக்கின்றது.என்றுமே இயற்கை அன்னைக்கு மனிதன் அடிபணிந்து வாழ வேண்டுமே அன்றி, அதனை வெல்ல வேண்டுமென்று நினைப்பது தவறு.அந்தவகையில் இயற்கைக்கு எதிரான விசயம் என்னெவென்று பார்ப்போம்.
எந்த ஒரு மனிதருக்கும் தனது வாழ்நாளில் தன் கால்கள் மூலமாக நின்று சுயமாக வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனுடன் சேர்ந்த ஆசைதான் சொந்த வீடு, சொந்த தொழிற்சாலை, சொந்தமாக வேலையாட்கள், அப்படிப்பட்ட வீட்டில் மனைவி மக்களுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கின்ற மிகப்பெரிய கனவுகள் இருக்கும். ஆனால் ஒரு கனவு இல்லத்தை கட்டிய பிறகு தனது தொழில் சார்ந்த நிகழ்வுகளில் நஷ்டங்களையும், கஷ்டங்களையும் பார்த்தால் மனிதனுக்கு தனது வாழ்வில் பயம் என்கிற விஷயம் வந்துவிடும்.
அப்படி பயத்தை கொடுக்கக்கூடிய, நோயை வரவழைக்கக்கூடிய, ஒரு சில வாஸ்து குற்றங்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
1.எக்காரணம் கொண்டும் இல்லத்தில் தென்மேற்கு மூலையில் படி அமைக்க கூடாது.
எனது வாஸ்து பயணத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வேலூர், ஜோலார்பேட்டை, குடியாத்தம், பள்ளிகொண்டான்,ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இத்தகைய படி அமைப்பு உள்ள வீடுகளை பார்த்திருக்கிறேன்.
- அடுத்ததாக தென் மேற்கு வாசல் என்பது மிக மிக மோசமானது.அப்படிப்பட்ட வீடுகள் பேய் இருக்கும் வீட்டில் வாழ்வதற்கு சமமானது.அப்படிப்பட்ட தென்மேற்கு தெரு அமைப்புள்ள, பார்வைகள் உள்ள இடங்களில் ஆண்களை நிராதரவாக வாழவைக்கும். ஆகவே தென்மேற்கு சார்ந்த வாஸ்து தவறுகளை ஏற்படுத்தி எக்காரணம் கொண்டும் வீடுகளை அமைக்க வேண்டாம். இந்த இடத்தில் நான் சொல்லக்கூடிய கருத்து என்னவென்றால், உங்களுக்கு வாஸ்து தெரிகிறதோ, இல்லையோ, நீங்கள் கட்டடம் கட்டும் கொத்தனாருக்கு அல்லது, இன்ஜினியருக்கு, வாஸ்து தெரிகிறதோ இல்லையோ, வாஸ்துவை தொழிலாகக் கொண்ட ஒரு நபரை வீடு கட்டும் போது கூட வைத்துக் கொள்ளுங்கள்.
