உணர்வின் சக்தி

துக்கமும் மகிழ்ச்சியும் கொட்டாவியை போல,

chennai vasthu
chennai vasthu

 

 

 

 

 

ஒருவரிடம் நெருக்கமாக பழகும் பொழுது அவரது #மனம் என்பதும், நமது மனம் என்பதும் உரசி #பசை பசையுடன் ஒட்டுவது போல ஒட்டிக் கொள்ளும். அப்போது அவருடைய மனத்தில் எண்ணங்கள் நமக்கும், நமது மனதின் எண்ணங்கள் அவருக்கும் சென்று கலக்கும். இதை எப்படி சொல்ல வேண்டும் என்று சொன்னால், துக்கம் விசாரிக்கச் செல்லும் இடத்தில் அங்கு இருப்போரின் மனதின் எண்ணங்கள் துக்ககரமாகவே இருப்பதால், அந்த #துக்கம் சார்ந்த என்னத்தின் பதிவு தொற்றிக்கொள்ளும். கலகலப்பாக கொண்டாடும் இடத்தில் அனைவரது மனமும் விரிந்து வெளிச்சமாக எங்கும் பரவி நிற்கும். புதிதாக அக்கூட்டத்திற்கு வருகின்ற மற்றவர்களுக்கும், அவர்களை உள்இழுத்து சுக அனுபவத்தை கொடுக்கும். அதயும் மீறி சிலர் வழக்கமான தொங்கிய முகம் மற்றும் வெறுப்பு, பொறாமையுடன் உள்நுழைந்து அந்த இடத்தையும் நோகடித்து விடுவார்கள்.

இந்த இடத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த19ம் நூற்றாண்டில் #திண்டுக்கல் மாவட்டம் #மார்க்கம்_பட்டியில் #ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, தற்போதைய #ஈரோடு மாவட்டம் #பெருந்துறை வட்டத்தில் #திங்களூர் கிராமம் அருகே #காசுக்காரம்_பாளையம் என்ற ஊரில் #வணிக_பிழைப்பு நடத்தி, அதன்பின் #புதுக்கோட்டை மாவட்டத்தில் #மெய்_வழிச்சாலை என்கிற தனி வழிபாட்டு குழுவை அமைத்து #இந்து மதத்தின் கோட்பாடு களையும், #சூபி வழி கோட்பாடுகளையும் இணைத்து தனி வழிபாட்டை மெய்வழி சாலை ஆண்டவர் அவர்கள் உறுவாக்கினார்கள்.அவர்களின் வழி வந்த அணந்தர்கள், வழிபாட்டு பழக்க வழக்க முறையில், துக்க நிகழ்ச்சிகளுக்கு காலம் கடந்து தான் செல்வார்கள். அதற்கு காரணம் ஒருவகையில் #பரிசுத்தம் என்று சொன்னாலும், #அசுத்தம் என்று சொன்னாலும் அதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவென்றால், துக்ககரமான இடங்களுக்கு காலம் தாழ்த்தி சென்றால் நம் மனதில் அந்த இடத்தின் சஞ்சலங்கள் நமது நரன் என்பவனுக்கு சந்தோஷத்தைக் தடுக்காது என்பது உள்ளே ஒளிந்திருக்கும் உண்மை என்பது எனது கருத்து.

இந்த இடத்தில் துக்கமும் மகிழ்ச்சியும் #கொட்டாவியை போல, அனைவருக்கும் தொற்றிக்கொள்ளும். ஆக எந்த இடத்திலும் சிரித்த முகத்தோடு சந்தோசத்தோடு நீங்கள் நடித்து வாருங்கள். அப்படி நடித்து வரும் பொழுது ஒரு கால கட்டத்தில் உங்களுடைய மனநிலையும் நடிப்பான சூழ்நிலைக்கு மாறிவிட்டதாக எண்ணிக்கொள்ளும்.நீ எதுவாக இருக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய் என்று #பகவத்_கீதை சொல்கிறது .
இந்த இடத்தில் இந்த நடிப்பும் ஒரு காலகட்டத்தில் உண்மையாகிவிடும்.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp: 9965021122
www.chennaivasthu.com
youtube: https://www.youtube.com/user/jagannathan6666

error: Content is protected !!