திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா

 திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா

நண்பர்கள் அனைவருக்கும், சென்னை வாஸ்து ஜெகன்நாதனின் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.இன்றைய வாஸ்து விளிப்புணர்வு கட்டுரையில்
திருஷ்டி பொம்மைக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா?

அரக்கர் படங்கள்:
**********************

நகர்புறங்களில் மற்றும் கிராமப்புற பகுதிகளில் புதிய இல்லத்தை அமைக்கின்ற போது இரவு செய்கின்ற வாஸ்து பூஜையில் பூசணிக்காயில் அரக்கர் படத்தை திருஷ்டி பொம்மை என்கின்ற பெயரில் படம் வரைந்து வைத்திருப்பார்கள்.ஒருசிலர் அரக்கர் படத்தையே மாட்டி வைத்திருப்பார்கள்.இதனை வீட்டிற்கு முன்பு உள்ள சாலைகளில் வருவோரும் போவோரும் பார்த்துக் கொண்டு செல்வார்கள். அப்படி பார்க்கின்ற அனைவரின் பார்வைகளும் ஒரே மாதிரியான கண்ணோட்டமாக இருக்காது.ஒருசிலர் நம்மால் இப்படிப்பட்ட கட்டிடங்களை கட்டமுடியவில்லையே என்கிற ஏக்கப்பார்வைகளும் மற்றும் , பொறாமை உணர்ச்சியுடன் வீட்டை பார்ப்பார்கள், அந்த பார்வை அவ்வில்லத்திற்கு ஒரு காலகட்டம் வரை பாதிப்பை தரும்.

திருஷ்டி பொம்மை வேண்டுமா?:
************************

ஒரு இல்லத்தை மிகச்சிறந்த வாஸ்து முறையில் அமைக்கும் போது எவ்விதமான படங்களும்,திருஷ்டி பொம்மைகளையும் வைக்க வேண்டிய தேவைகள் ஒரு இல்லத்திற்கு ஏற்படாது என்பதனை என்னால் உறுதியாக கூறமுடியும்.

திருஷ்டி பொம்மை உண்மையா?
***********************

இந்த பூமியில் தற்காலத்தில் இல்லாத ஒரு உருவத்தை
இல்லத்தின் முன்பு வைத்தால் அந்தப்பாதையில் கடந்து செல்லும் அனைத்து மக்களின் பார்வையும் இல்லத்தை பார்க்காது அந்த அரக்க உருவத்தின்மீது விழும். இதுவும் அந்த இல்லத்திற்கு தீங்கானது ஆகும்.உண்மையாக சொன்னால் இதுஒரு கற்பனை சார்ந்த பொம்மை ஆகும்.

இயற்கையே உண்மை:
***************************

ஆகவே இயற்கையான முறையில் வெண்பூசணியை மட்டும் கருப்பு கம்பளி நூல் கயிறுகள் கொண்டு கட்டி தொங்க விடும் போது அந்தவீட்டிற்கு ஏற்படும் அனைத்து விதமான திருஷ்டி பார்வைகளையும் உள்வாங்கி கொள்ளும்.
இதனால் இல்லமும், இல்லத்தின் குடும்ப நபர்கள் அனைவருக்கும் தீய பார்வையிலிருந்து விடுபடுவார்கள். இதனையே நமது பழந்தமிழ் முன்னோர்கள் கல்லடி பட்டாலும் கண்ணடி என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர். பூசணிக்காய்க்கு தீய பார்வையிலிருந்து வரும் கெட்ட அதிர்வுகளை கவர்ந்து தனக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு.மேலும் பூசணிக்காய் மூலமாக பலவித நன்மைகள் மனித உடலுக்கு உண்டு. அதனை முறையாக நாம் உணவில் எடுத்துக்கொண்டு வரும்போது நமது எதிர்மறை எண்ணங்கள் கூடவிலகிவிடும்.அப்பொழுது நமது வெற்றி என்பது எளிதானதாக மாறிவிடும். இதனை நான் வாஸ்து பயணத்தின் போது நண்பர்களுக்கு விரிவாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை விளக்கி வருகின்றேன்.இதனை ஒருவர் தொடர்ந்து கடைபிடிக்கும் போது உறவுகள் உடைபடாத மற்றும், பணம் சார்ந்த நிகழ்வுகளில் என்றும் பற்றாக்குறை இல்லாத,நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கை அமையும்.

மீண்டும் வேறு வாஸ்து சார்ந்த பதிவோடு சந்திப்போம். நன்றி வணக்கம்.