திருஷ்டி கழிப்பது என்பது, பூசணிக்காய் உடைத்தல், எலுமிச்சம்பழம் அறுத்து வீசுதல், தேங்காய் உடைத்தல்,

வாஸ்து
ஆன்மீக ரகசியங்கள்:

உடலில் இருக்கும் அனைத்து அங்கங்களும் வயது கூடக்கூட குறிப்பிட்ட வயதுவரை கூடிக் கொண்டிருக்கும். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு சுருங்கி கொண்டிருக்கும். ஆனால் உடலில் இருக்கும் கண்கள் மட்டுமே சுருங்குவதோ கூடுவதோ கிடையாது. அங்குதான் கடவுள் ஒரு மிகப்பெரிய விஷயத்தை வைத்திருக்கிறார். மனிதனின் உயிர் நிலையை தெரிந்து கொள்ள கண்களை பார்க்க வேண்டும். இதனால்தான் மரணத்தருவாயில் இருக்கும் மக்கள் அவர்களுடைய உயிர் நிலையை தெரிந்து கொள்ள கண்கள் மிக மிக முக்கியம். அந்த வகையில் மனித வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை கொடுப்பது கண் திருஷ்டி. அந்த திருஷ்டி போகவேண்டும் என்று சொன்னால் திருஷ்டி கழித்தல் மிகவும் முக்கியம். கடவுள்களுக்கு கூட கண்திருஷ்டி உண்டு. உற்சவ மூர்த்தங்கள் வீதி உலா முடிந்தபிறகு ஆலயங்களுக்கு மீண்டும் செல்வதற்கு முன்பாக திருஷ்டி பரிகாரம் செய்வார்கள். குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்படக்கூடாது என்பதற்காக நாய் காசு கட்டுவதும், கருவேலங்காயில் மை செய்தும்,வேங்கை மரபாலில் மை செய்தும் இடுவார்கள்.

மனிதர்களுக்கு எப்போதும் நெகட்டிவ் விஷயங்கள் அதிகம் இருக்கும். பாசிடிவ் விஷயங்கள் குறைவாக இருக்கும். ஒரு மனிதன் விஷப் பார்வையோடு பெருமூச்சு விடும்போது, அந்த நபர்களும் அது சார்ந்த பொருட்களும் பாதிப்படைகின்றன.ஒருவரை முன்னால் விட்டு பின்னால் பார்க்கும் நபர்களாலும் திருஷ்டி உண்டாகும். அந்த வகையில் பல நிறங்களை மனிதர்கள் பார்க்கும் பொழுது திருஷ்டி கழிகிறது. அவர்களுடைய பாசிட்டிவ் எனர்ஜி கூடுகிறது. இதற்காகத்தான் அக்காலங்களில் திருமண வீடுகளில் கலர் காகிதங்கள் கட்டுவார்கள். மணமக்களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் அணிவிப்பார்கள்.மருதோன்றி பூசுவார்கள். மஞ்சள் கலவையை வாசலில் கலக்கின்றனர். வீடு கட்டும்போது வாஸ்து பரிகாரம் வகையில் கரும்புள்ளி செம்புள்ளி வெண்புள்ளி ஏற்படுத்தி பூசணிகட்டுகிறார்கள். அல்லது படம் வரைந்து கட்டித் தொங்க விடுகின்றனர். வீடுகளிலும் விளக்கு இலுப்பை எண்ணெய் வைக்கின்றனர் .

அந்த வகையில் திருஷ்டி கழிப்பது என்பது, பூசணிக்காய் உடைத்தல், எலுமிச்சம்பழம் அறுத்து வீசுதல், தேங்காய் உடைத்தல், மற்றும் அதர்வண வேத பரிகார விசயத்தில் கருங்கோழி அறுத்தல், கோழிமுட்டையை உடைத்தல் போன்ற ஒரு சில விஷயங்கள் உள்ளன. வீடுகளில் அல்லது வியாபார ஸ்தலங்களில் ஒருமனிதன் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டும் என்றால் தினமும் திருஷ்டி எடுக்க நூறு வருட மரப்பட்டை மற்றும் வெண்கடுகு நாய்கடுகு கலந்து சாம்பிராணி புகை போடுவதும்,பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னையின் கண்கள் சார்ந்த படங்களை தொழிற்சாலை அல்லது வீடுகளில் வைக்கும்போதும் திருஷ்டிகள் விலகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992

 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv