திருச்செந்தூரில் சுக்கு மிளகு

ஆன்மீக ரகசியம்:

திருச்செந்தூரில் சுக்கு மிளகு கலந்து தயாரிக்கின்ற சில்லு கருப்பட்டி மிகவும் மகிமை வாய்ந்தது. அதாவது சத்ரு சம்கார கருப்பட்டி என்று பெயர். அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் அருந்திவிட்டு வெறும் தண்ணீர் உண்டு வந்தால், சத்ரு என்கிற எதிர் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். இதனைத்தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மேலான கடவுளும் கிடையாது, என்கிற முதுமொழி நமது முன்னோர்கள் மூலமாக வந்தது. ஆக தினமும் காலை ஜெயந்திநாத பெருமானுக்கு சுக்கு காப்பி தான் நைவேத்தியம். இந்த இடத்தில் திருச்செந்தூரில் அன்னதானம் என்கிற விஷயத்தில் சுக்கு காபி தானம் கொடுத்தால் மிகுந்த நன்மையளிக்கும்.

வாஸ்து இரகசியம்:

வாஸ்து ரீதியாக ஒருவருக்கு எதிரிகள் சார்ந்த தொல்லைகள் வீட்டில் எங்கு இருக்கும் தவறுகளால் ஏற்படுகிறது என்று பார்த்தோமானால், ஒரு இல்லத்தில் தென்மேற்கு, வடமேற்கு சார்ந்த தவறுகள் இருக்கின்ற பட்சத்தில் எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். சத்ருக்கள் மூலமாக மறைமுக எதிர்ப்பு, பில்லி, சூனியம், ஏவல் குரளிவித்தை மருந்து கொடுத்தல் பாவை இயக்குதல் போன்ற பிளாக் மேஜிக் சார்ந்த விஷயங்களால் பாதிக்கப்படுவார்கள். தென்மேற்கு பகுதியில் அதிக இடங்களும், தென்மேற்கு பள்ளங்களும், வடமேற்கு இடம் இல்லாது கட்டிடங்கள் இருப்பதும் மேற்கூறிய விஷயத்தில் எதிரிகள் சார்ந்த தொல்லைகளுக்கு துணைபோகும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992