vastu for nearest house in temple

தென்கிழக்கு வாஸ்து

 

வாஸ்துபயணம்
வாஸ்துபயணம்

வாஸ்துவும் திசை சூட்சுமங்களும் :
திசை சூட்சுமங்களும், திசை காரக அமைப்புகளும் பற்றி இப்பொழுது சொல்லக்கூடிய விசயங்களாகும். இது தனிப்பட்ட வாஸ்து ஆராய்ச்சி கட்டுரை. ஒவ்வொரு திசைகளும் ஒவ்வொரு விசயங்களை பேசும். ஒவ்வொரு திசையும் நமது வீட்டில் உள்ள நபர்களை இயக்கும். இயங்கவிடும். இயங்க விடாமலும் தடுக்கும். மிகச் சரியான அமைப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பை நாம் ஏற்படுத்தி கொடுக்க முடியும் திசைகளின் வழியாக.

தென்கிழக்கு

மின்சாரம் சம்மந்தப்பட்ட அமைப்பு, உடலுக்கு ஆரோக்கிய உணவு மூலம் சிறப்பு பெறுதல், தனது உடலை பற்றி அறியும் தன்மை, மருத்துவ அறிவு சார்ந்த விசயங்கள், தேவையில்லாத உழைப்புக்கள், தேவைப்படும் உழைப்பு, யாருக்கும் கட்டுப்படாத வாழ்வு, சுதந்திர எண்ணம், வீட்டின் பெண்மக்கள் மற்றவர்களை வெற்றி பெறக்கூடிய தன்மை, சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக சமூக கட்டுப்பாடுகளை மீறாமல் இருத்தல். சமூக நலத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படுதல். தன்னை சந்திக்கும் நபர் மூலம் எந்த வகையிலாவது பொருளாதாரம் பெறும் அமைப்பு, தொழில் கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது. தொழில் கூட்டாளிகளை தன் கட்டுப்பாட்டில் வைப்பது. மற்றவர்களுடன் நாம் பழகும் பழக்கம் பயணுள்ளதாக அமைய வேண்டுமா? வேண்டாமா என்பதை தீர்மானிப்பது. உடலுறுப்புக்கள் வலியுணர்ந்து உடனே மருத்துவம் பார்க்கும் அமைப்பு, மருத்துவமனைக்குச் சென்றால் உள்நோயாளியாக சேராமல், வெளிநோயாளியாகவே சிகிச்சை பெறும் தன்மை, வீட்டில் வசிக்கக்கூடிய பெண்மணி அதிக தெய்வ நம்பிக்கை உடையவராக இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது, வீட்டிலிருக்கும் பெண்கள் மிக ஒல்லியாக இருப்பது, அல்லது அதிக எடையுடன் இருப்பது, அசாத்திய தைரியம், இயந்திரங்கள், நிலங்கள், உடல்களில் குறைபாடு அமைப்பு, தேவைக்கு ஆள் வைத்துக் கொள்வது அதாவது மருத்துவ சிகிச்சை எடுக்கும்பொழுது வீட்டில் வேலையாட்கள் வைத்துக் கொள்வது, பாதுகாப்புத்துறையில் (Security Service) ஆள்வைத்து தொழில் செய்வதும், வேலை வாய்ப்புகளுக்கு நபர்களை அனுப்புவது, இரைப்பை சர்க்கரை நோய், கல்லீரல், கொழுப்பு, மஞ்சள் காமாலை, உணவு எண்ணெய் சம்மந்தமாக வரும் நோய் அமைப்பு, கணையம் சம்மந்தப்பட்ட நோய், ஆடம்பர செயற்கை துரித உணவுகள் மூலம் வரக்கூடிய நோய்கள், ஆடம்பர திருமணம் செய்வது, மூல நோய், மறைமுக நோய்கள் இதற்கு காரணம் தென்கிழக்கு மட்டுமே.

வீட்டில் உள்ள மனைவி செல்வநிலையில் இருப்பது அதாவது அந்த வீட்டில் ஒரே பெண். அந்த பெண்ணிற்கு வசதி குறைந்த வீட்டிலிருந்து வரன் வருவது என்பது அதன்மூலம் அந்த மணமகனை தத்தெடுக்கும் நிலை, அதேபோல நமக்கு ஒரே பெண் குழந்தை இருந்து நமக்கு பொருளாதார ரீதியாக வருமானம் இல்லாத பொழுது மிக வசதியாக உள்ள குடும்பத்திற்கு நமது பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது போன்ற சம்பவங்களுக்கும் தென்கிழக்கே காரணம்.