வாஸ்து வழியாக பிரிந்த மனைவி

தாம்பத்திய வாழ்வில். யாருக்கு சந்தோச வாழ்வு அமையும்?

வாஸ்து வழியாக பிரிந்த மனைவி
 பிரிந்த மனைவி

தாம்பத்திய வாழ்வில். யாருக்கு சந்தோச வாழ்வு அமையும்?

உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும்
காம உணர்வு என்பது இயல்பான ஒன்று, இந்த காமக்கலையை சொல்லி கொடுக்காமல் தானாக அனைத்து உயிரினங்களுக்கும் தோன்றுவது இயற்கை ஆகும். அவசரமான ஆத்திரத்தில் தனித்துக்கொள்ள யாரும் சொல்லி அறியவேண்டியது கிடையாது.

ஒரு இல்லத்தை எடுத்துக் கொண்டால் கணவன் மற்றும் மனைவி உறவு என்பது புனிதமான ஒன்று. ஆக கணவன் மனைவி இடையே நல்ல உறவு இல்லாமல் போகும் போது குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது. எனது வாஸ்து பயணத்தில் ஒரு பெண்மணி அழைப்பின் பேரில் அந்த பெண்ணின் கணவர் சார்ந்த உறவினர் என்னை வாஸ்து ஆலோசனைக்காக அழைக்கின்றார்.அதாவது ஒருவருக்கு ஒருவர் பழி சுமத்திகொண்டு சண்டை சச்சரவு என்று கடந்த ஆறு வருடத்திற்கு மேல் காலத்தை வீணடித்து உள்ளார்கள். ஒரு கட்டத்தில் இவரது மனைவி இவரைவிட்டு பிரிந்து கடந்த ஒரு வருடமாக தனது தாய் வீடு சென்று தனது தாய் தந்தை உடனாக வாழ்ந்து வருகின்றார்.

மனைவிக்கு கணவரின் மீது ஈர்ப்பு மற்றும் பாசம் என்பது கிடையாது இல்லை என்றும், தாம்பத்தியத்தில் தனக்கு ஈடுபாடு அதிகம் விருப்பம் இல்லை.அதாவது எனது உடல் அந்த எண்ணமே எனக்கு தோன்றுவது கிடையாது . ஆனால் எனது கணவருக்கு நான் தினமும் கூட இருந்தால் அதிக சந்தோஷப் படுவார்.என்னால் அதனை ஜீரணம் செய்ய முடியாத காரணத்தால், எனது கணவரை பிரிந்து வாழ்கிறேன் என்று என்னிடம் திறந்த மனதோடு கூறுகிறார்.

இவர்களின் இல்லத்தை வாஸ்து ஆராய்ச்சி செய்யும் போது, முதலில் குடும்ப உறவுகளை நிர்நியம் செய்யும் வாயு மூலை கடுமையாக பாதிப்பு அடைந்து இருந்தது.அதாவது அங்கு மிக அதிக ஆழத்தில் ஒரு பனிரெண்டு அடி அகலத்தில் தவறான கிணறு இருந்தது.

கணிதத்தில் விடை கண்டுபிடிக்க சூத்திரத்தில் பொதுவான நிலையான எண் பயன்படுத்துவதை போல் காமதேவனின் கணிதப்புள்ளி ஒரு இல்லத்தில் வாயு மூலையே ஆகும். குடும்ப உறவில் தாம்பத்தியம் முதன்மை ஆக இருப்பினும், ஒரு இல்லத்தின் வழியாக காமத்தை இயலாத நிலையும் அல்லது தறிகெட்ட நிலையும் அரங்கேற்றப்படும் என்பதே உண்மை. இதற்கு வாயு மூலை வழியாக தான் இயங்கும்………….

வாயுமூலை தவறுகள் உள்ள இல்லத்தில் வசிக்கும் ஆண்கள் எப்பொழுதும் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள். உடலின் ஆரோக்கியத்தை தேவை இல்லாத சிந்தனையால் கெடுத்துக்கொள்ளுவார்.

உடலில் வீரிய, தைரிய, தொடர்பு இல்லாமல் சிந்தனையில் அக வாழ்வில் நாட்டத்தை குறைக்கும், சிந்தனை முழுக்க பொருளாதார எண்ணங்களே மேலோங்கி இருக்கும். மேலும் உடல் நரம்பு தளர்ச்சியால் படபடப்புடன் காணப்படுவார்கள். எதிலும் நிதானம் இல்லாமல் அவசர கதியில் செயல்படுவார்கள். இதற்கு காரணம் ஒரு இல்லத்தில் உள்ள வாயு மூல தவறுகளே ஆகும்.

வாயு மூலை தவறுகள் உள்ள இல்லத்தில் வசிக்கும் ஆண்களின் காம உணர்வு என்பது, எதையும் ரசிக்கும் தன்மையில் ஒரு மந்த நிலையை தந்துவிடும். அந்த வீட்டின் ஆண்மகன் சராசரி பொழுது போக்குகளில் தன்னிச்சையாக ஈடுபடமாட்டார். சிற்றின்ப வேட்கையில் சற்று மந்த நிலையிலே இருப்பார்.மனைவி மீதான வசீகர ஈர்ப்பு குறைந்த தன்மையை பெறும் அமைப்பாக வாயுமூலை தவறு உள்ள இல்லத்தில் வசிக்கும் ஆண்களுக்கு இருக்கும்.

ஒரு இல்லத்தில் வாயு மூலை தவறுகள் இருக்கும் போது அந்த வீட்டில் உள்ள ஆண்கள் எப்போதும் மெத்தை மீது பகலில் எப்போதும் படுத்துறங்கும் நிலை மற்றும், உறக்கம் மற்றும் கட்டில் சுகம் கிடைக்காது எங்கு படுத்தாலும் நிம்மதியாக தூங்குவார்.. மற்றும்
கவர்ச்சி மற்றும் பெண்ணின் மீது ஒரு ஆணுக்கு உண்டாகும் மோகத்தை கொடுக்காமல் கடுமையான புத்திர தோஷத்தை கொடுத்துவிடும். ஒரு மனிதனின் மூலையை வாயு மூலை ஆழ்வதால்,நரம்பு சம்பந்தமான நோய் கூறு காரணமாக, நரம்பு தளர்வினால் விறைப்பு தன்மையில் ஜாதகர் நீடித்த நிலையில் செயல்பட இயலாது.

இந்த வீட்டில் வசிக்கும் ஆண் நல்ல மருத்துவரை அணுகி சரியான முறையில் தொடர் சிகிச்சை பெற்றால் ஓரளவுக்கு தாம்பத்திய குறைகளை சரிசெய்துவிடலாம். இவரும் சராசரியான அளவில் தாம்பத்தியத்தில் இன்பம் காணலாம்.ஆனால் வாயு மூலை தவறுகளை சரி செய்யாமல் நிவர்த்தி ஆவது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பதை போன்றது.

எந்த வீட்டில் பெண்ணை அடக்கி ஒரு ஆண் ஜெயிக்கிறானோ அங்கே ஒரு மிருகம் ஜெயித்தது என்று பொருள். எங்கே ஒரு ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஒரு விலங்கு ஜெயித்தது என்று பொருள்.

கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் தோற்றுப் போனால் குடும்பம் ஜெயிக்கிறது! என்று அர்த்தம். அந்த வகையில்
மேலும் தாம்பத்திய உறவில் மனிதர்கள் இருவகைப்படுவார்கள்

தன்னை பிறர் அனுபவிப்பதில் இன்பமுடையவர்கள்.

பிறரைத் தான் அனுபவிப்பதில் இன்பம் காண்பார்கள்.

அனுபவிக்கும் பரபரப்பு இருவரிடமும் இருக்கிற போது தாம்பத்தியம் முற்றிலும் தோல்வியை தழுவுகிறது. பிறர் தன்னை அனுபவிக்க வேண்டும் என்கின்ற குழைவு நிலை இருந்தால் செக்ஸ் ஆரம்பம் ஆவதே இல்லை.

கணவன் மனைவி உறவு என்பது ஆண்டான் அடிமை உறவே அல்ல! முதலாளி தொழிலாளி உறவும் அல்ல.. அது ஒரு உன்னதமான நட்பு.
எந்த வீட்டில் கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருக்கின்றார்களோ அந்த வீட்டில் நிம்மதியும் நிச்சயமாக இருக்கும்.
மாறாக அன்பின் அளவில் குறைவு ஏற்பட்டால் பிரச்னையின் ஆரம்பத்திற்க்கு இது மூலமாக அமைந்துவிடும். சதா சண்டையும், கூச்சலும், குழப்பமும் தொடர்ந்தால் குடும்ப உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடும்.

அவசர யுகத்தில் எந்திர வாழ்க்கையை வாழும் மனித இனம் இழந்தது ஏராளம். அறிவியல் வளர்ச்சியில் பல சாதனைகளை புரிவார்கள் ஆனால் குடும்ப வாழ்வில் நாட்டமில்லாமல் சொந்தங்களை இழந்து தனிமைப்படுவார்கள். இவர்கள் எல்லாம் சின்ன சின்ன விஷயங்களில் தோற்றுப்போய்விடுவார்கள். காரணம் வாழ்வை சமமாக அணுகாததின் விளைவு.

தம்பதியருக்குள் சரியான புரிதல் இன்மையால்நமது அளவில் சதவீத தம்பதியினர் உடலுறவு இல்லாமல் காலத்தை கழிக்கின்றார்கள்.

நமது இந்தியாவில் நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி மனு அளிக்கும் நூறில் நான்கு குடும்பங்கள் சரியான தாம்பத்தியம் கிடைக்காததினால் வழக்கு தொடுக்கின்றனர்.

வனப்பை வாரியிறைக்கும் வசிகரத் தோற்றம் கண்களால் கதைப்பேசும் காந்த பார்வை… சாமுத்திரிகா லட்சணத்தை ஆணுக்கும், பெண்ணுக்கும் அள்ளி வழங்கி அழகுபார்த்த காமத்தின் ஜலத்தை வார்த்தைகளால் வார்த்தெடுக்க முடியாது.

பலமான அமைப்பில் வாயுமூலை இரூந்தால் ,அங்கு வாள்பவர்களின் வாழ்க்கை ஆடம்பரமாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஒட்டு மொத்த இன்பத்தையும் வட்டியும் முதலுமாக பெற்றவர்கலாக இருப்பார்கள்.

மன்மத லீலையின் முக்கிய ரகசியம் என்ன?
தாம்பத்தியம் என்கிற உடல் உறவில் திருப்தி அடைவது முக்கிய விஷயமல்ல! திருப்திப்படுத்துவதே முக்கியம்.
தனது மனநிறைவைவிட தன் துணையின் ஆனந்தமும், திருப்ப்தியும்மே அவசியமானது. இந்த ரகசியத்தை அனைவரும் உணர்ந்துவிட்டால் தாம்பத்திய நுட்பம் எல்லாம் தெளிவாக விளங்கிவிடும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவரை புரிந்து கொண்டு, அன்பு நேசித்து ஒருவருள் ஒருவராய் இணையும் போது மகிழ்ச்சியின் எல்லை விரிவடையும்.

குடும்பத்தில் ஆனந்தம் என்றும் நிலைத்து இருக்கும்.

error: Content is protected !!