தரைத் தளங்களுக்கு டைல்ஸ் கிரானைட் மார்பிள் வாஸ்து

நண்பர்களுக்கு வணக்கம். தரைத்தளங்களுக்கு எந்த மாதிரியான டைல்ஸ்,அல்லது கிரானைட், மார்பிள் இப்படி எவை தேவையோ அதனை அமைக்கலாமா என்ற கேள்வி எனது தொலைபேசி வழியாக கேள்விகள் வருகிறது. இந்த இடத்தில் கோயில் சார்ந்த, இயற்கை சார்ந்த பாறை என்பது இயற்கை அளிக்கும் செயலாக இருக்கிறது. பாறைகளை வெட்டி அந்த கற்களை இல்லத்திற்கு மேல்தள அமைப்பாக எக்காரணம் கொண்டும் வைக்கக்கூடாது. அதற்கு ஒரு காரணம் உண்டு ஆலயங்களில் சுவர்களுக்கும், தரைகளிலும் பாதிக்கக்கூடிய கற்களுக்கு திம்மிக் கல் என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள். அந்த கற்களை இல்லங்களில் நவீன தொழில்நுட்பம் கொண்டு பளபளப்பாக மாற்றி கிராணைட் என்ற பெயரில் அமைப்பது என்பது தவறு. அப்படி அமைத்து இருக்கக் கூடிய வீடுகளில் எப்போதும் ஒரு சோகம் நிறைந்தே காணப்படும்.அல்லது அங்கு ஒருவர் அல்லது இருவர் வாழக்கூடிய இல்லங்களாக குறிப்பிட்ட வருடங்களில் மாறிவிடும். ஆகவே தரைகளுக்கு முதன்மையானது, நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் வழியாக உற்பத்தி ஆகும் டைல்ஸ் மட்டுமே சிறந்தது.