ஜோதிடத்தில் ராகுவின் காரகங்கள்/Ragu kethu in astrology/kp astrology in tamil

ஜோதிட வகையில் துணைக்கோள் ஆக இல்லாமல் இருந்தாலும் சூரியன், சந்திரன்  சம்மந்தமில்லாமல் இருந்தாலும், சூரியன் சந்திரன் சார்ந்த நிழலாக இருந்தாலும், அதை கிரகங்கள் என்று சொல்கின்றோம். அந்த வகையில் ராகு, கேதுக்கள் நிழல் கிரகங்கள், சாயா கிரகங்கள் ஆக இருக்கின்றன.ராகுவின் காரகம் ஏறக்குறைய சனியின் காரணங்களை ஒத்து இருக்கும் என்று சொல்லலாம். ஏனென்றால்  ராகு திசை 18 வருடம், சனி திசை 19 வருடம் ஆகும்.   அந்த வகையில் ராகுவின் காரணங்கள் என்று பார்க்கும் போது கண்ணுக்கு புலனாகாத ஆவி, பேய், மாந்திரீகம், பிசாசுகள், செய்வினை, பில்லி, குரளி வித்தை,சூனியம் போன்ற விஷயங்களுக்கு காரணம் ராகு.என்னைப் பொருத்த அளவில் எதையும் பெரிய அளவில் கொடுக்கக் கூடிய கிரகம் ராகு  என்பேன். அந்த வகையில் ராகு அம்சமாக விஷ ஜந்துக்கள் தீண்டினால் ஒரு மனிதனுக்கு மரணம் ஏற்படும். ஒருவருடைய மனதை காயப்படுத்தி அவனை அகங்காரம் கொண்டவனாக ஆக்குவதும், மது போதைக்கு அடிமைப்படுத்தப்பட்டு கேவலப்படுத்துவதும் ராகுவின் காரகம். ராகு சனியைப் போல இருக்கும் கிரகம். ராகுவும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது.  சமுதாயத்திற்கு பொருந்தாத ஓரினச்சேர்க்கை, கூட்டுக்கலவி, ரத்த பந்தங்கள் இடையே தகாத பாலின உறவு,  மக்கள் பார்க்கும் பொழுது முஸ்லிம் மக்கள் ராகுவாக  பார்க்கப்படுகிறது. அன்னிய மதம் , அன்னிய மொழி ராகு காரணமாகிறது. திரைப்படம் சம்பந்தப்பட்ட போட்டோ, சினிமா, மின்சாரம் போன்றவற்றுக்கும் ராகுகாரகம். சிறிய அளவில் திருட்டுக்கு சனி காரகம் என்று சொன்னோம். அதே திருட்டை  பெரிய அளவில் செய்யும் பெரும் கொள்ளை,வங்கி கொள்ளை,நகைக்கடை கொள்ளை ,பணக்கார வீட்டில் கொள்ளை, கடற்கொள்ளை, ஆட்களை கடத்துதல், குழந்தைகளை கடத்தி வைத்து கோடிக்கணக்கில் பணம் கேட்பது, வெளிநாட்டு சதி, இவை அனைத்துக்கும் காரகம் ராகு.

மரணத்திற்கு காரகன் சனி என்று சொன்னால், ராகுவை பொருத்தளவில் இயற்கைக்கு எதிராக வரக்கூடிய மரணங்கள் ஆன இயற்கைச் சீற்றம், எடுத்துக்காட்டாக சுனாமி, பேருந்து ,புகைவண்டி விபத்து சார்ந்த  பிரமாண்ட கூட்டு மரணங்கள் ராகு காரகன். மேலும் சிறைச்சாலை , உடலில் தோல் நோய்,  மூச்சுக்காற்று சுவாசம் சார்ந்த நோய், அலர்ஜியால் ஏற்படும் படைகள், பெரிய பாத்திரங்கள், பெரிய விருந்து கூடங்கள், வெளிநாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப் பட்ட விஷயங்கள், எதையும் பெரிதாக இட்டுக்கட்டி பேசக் கூடிய மனிதர்கள், மோசடி வித்தைகள், வழக்கத்திற்கு மாறான  புற்றுநோய், முன்னோர்கள் ,அப்பா வழி தாத்தா, பாட்டி,  தெய்வங்களில் துர்க்கை, ரத்தினங்களில் கோமேதகம் ஆகியவை ராகுவின் காரகங்களாகும் . அசுப கிரகம் என்று சொன்னாலும் ஒரு ஜாதகத்தில் 2, 4, 6, 10 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு நூறு ஏக்கர் வைத்திருக்கின்ற மனிதராக, பெரிய அளவில் பிரம்மாண்டமான அளவில் தொழில் செய்யக்கூடிய மனிதராக ஒருவரை மாற்றி ராகு வைப்பார். அதேபோல  8 ,12 பாவங்களுடன் தொடர்பு கொள்ளும்போது எந்த அளவுக்கு அந்த மனிதன் கேவலப்பட்ட வாழ்க்கை வாழ முடியுமோ,  அந்த அளவுக்கு அவர்களை கொண்டு போய் நிறுத்தி வைத்து வேடிக்கை செய்வார். 1 ,3, 7, 11 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது ராகுவை பொறுத்தளவில் எதையும் எளிதாக கிடைக்கக்கூடிய, கடன் பெரிய அளவில் இருக்காத நிலையை ராகு கொடுப்பார். அதே 5,9 தொடர்பு கொள்ளும்போது எப்பொழுதும் பெரிய அளவில் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதனாக உருவாக்கி வைத்து விடுவார். எது எப்படி இருந்தாலும் இந்த விஷயங்கள் ராகு தசா புத்தி காலங்களில் நடைபெறும் நடக்கும். திசா புத்தி இல்லாத போது  வேறு திசையில் ராகு புத்தி  வரும்போது  இது போல ஒரு நிகழ்வுகளை கொடுப்பார். இந்த காலகட்டங்களில் பிச்சைக்காரன் படத்தில் கதாபாத்திரம் வருவது போல ஒரு மனிதன் மாறிவிட்டால் பெரிய அளவில் அந்த மனிதனை பாதிக்க செய்ய ராகு முயற்சிக்க மாட்டார்.