ஜாதக பொருத்தம் பார்க்காமல் அல்லது, ஜாதகத்தை மாற்றியோ திருமணம்

ஆன்மீக இரகசியம்:

ஒருசில மக்கள் ஒரே ஜாதியில் பிறந்து விருப்பத்தின் அடிப்படையில் ஜாதக பொருத்தம் பார்க்காமல் அல்லது, ஜாதகத்தை மாற்றியோ திருமணம் செய்திருப்பார்கள். இந்த விஷயங்கள் வெளி உலகிற்கு தெரியாது. அப்படி இருக்கும் மக்கள் ஒரு சில கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அந்தவகையில் இருக்கும் மக்கள் எதாவது கஷ்டங்கள் அனுபவிக்கும் பொழுது அதற்கு இது காரணமாக இருக்குமோ என்கிற ஐயம் இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்வில் ஒரு பரிகாரமாக திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை வழிபட்டு 48 மக்களுக்கு மேல் அன்னதானம் செய்துவிட்டு வரும்போது அவர்களுடடைய சொல்ல முடியாத கஷ்டங்கள் விலகும்.

வாஸ்து இரகசியம்:

தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த மனைகளாக இருந்து, அங்கு மாடி வீடு கட்டும் பொழுது பால்கனிகள் சாலை பகுதிகளில் நமது மக்கள் விரும்பி அமைப்பார்கள். அப்படி வைப்பது வாஸ்து ரீதியாக தவறாக முடிந்துவிடும். இதுவே கிழக்கு சாலைகள் இருந்து வடக்கு சாலையிலிருந்து பால்கனி வைப்பது வாஸ்துவில் தவறு கிடையாது. தெற்கு பகுதிகளில் மேற்கு பகுதிகளிலோ சாளர அமைப்பில் பால்கனிகளை அமைத்துக்கொள்ளலாம்.ஆனால் அமைக்கின்ற பால்கனி தென்மேற்கு வரை நீண்டு விடக்கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

(#வாஸ்து மற்றும் #ஜோதிடம் #எண்கணிதம்)
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995