ஜவுளி கடைகளுக்கான வாஸ்து

ஜவுளி கடைகளுக்கான வாஸ்து அமைப்பு

ஜவுளி கடைகளுக்கான வாஸ்து அமைப்பு 

 

 

 

 

வாழ்க்கையில் நாம் சந்திக்ககூடிய நமது நண்பர்கள், நமது உறவினர்கள்,நம்மோடு பணிபுரியும் நண்பர்கள் இப்படி யாராக இருந்தாலும் அவர்கள் உடுத்தி இருக்கும் துணிகளை பார்த்து நாம் இந்த ஆடையை எந்தக்கடையில் வாங்கினீர்கள்.மிகவும் அழகாக இருக்கிறது. இதன் விலை என்ன. எனக்கும் இந்த துணி வேண்டும் எந்த கடையில் துணி எடுத்தீர்கள் சொல்லமுடியுமா? என்று கேட்போம்.

துணிக்கடை வைத்திருக்கும் பெறு நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் எல்லா ஊரிலும் ஊரிலும் உண்டு என்பதை யாவரும் அறிந்ததே.’ஆள் பாதி ஆடை பாதி’ என்போம் இதே போல் நாம் உடுத்தும் உடைகளின் மூலமாக கலை நயம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் நாம் பார்க்கப்படுகிறோம்.

எனது வாஸ்து பயண அனுபவத்தில் ஒருசில கட்டிட அமைப்புகளில் உள்ள துணிக்கடைகளின் ஆடைகள் தான் இது போல் கலைநயம் மிகுந்ததாக வெளிப்பார்வைக்கு தெரிகிறது. வாஸ்து அமைப்பில் அவர்களின் கட்டிடம் இருக்கின்ற காரணமாக அவர்களின் வியாபாரம் நன்றாக நடக்கிறது.இதனால் மிக கலைநயம் மிக்க வேலையாட்களை வைத்து அவர்களால் உருவாக்க முடிகிறது.

வடமேற்கு பகுதியில் இருக்கும் ஒருசில வாஸ்து விசயங்களை கொண்டு அத்துணிக்கடைகள் பிரபலமடைகின்றன.ஆக எந்தவொரு நிறுவனங்களும் பிரபலமடைய வேண்டும் என்றாலே வடமேற்கில் ஒருசில விசையங்களை இணைக்க வேண்டும்.பொதுவாக ஒரு மனிதன் பிரபலத்திற்கு காரணமாக அமைய கூடிய இடம் வட மேற்கு திசை மட்டுமே காரணம்.

error: Content is protected !!