சொத்துக்களுக்காக சண்டை

சொத்துக்களுக்காக சண்டை

சொத்துக்களுக்காக சண்டை
சொத்துக்களுக்காக சண்டை

 

 

 

 

 

இன்று இந்தியாவில் சொத்துக்களுக்காக தான் சண்டையும் வம்பு வழக்குகளும் நடக்கின்றன அதேபோல ஒரு ஊரின் அருகில் தேசிய நெடுஞ்சாலை வந்த பிறகு சொத்து மதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. அதனால் சொத்துக்களுக்காக ஆண் பெண் வாரிசு கிடைக்கும் சண்டை சச்சரவுகள் அதிகம் நிகழ்ந்தவண்ணம் உள்ளன .ஆகவே ஒவ்வொரு சொத்து விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

இந்திய சட்டப்படி யாருக்கு எல்லாம் சொத்தில் உரிமை இல்லை! அதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஒரு பெண்ணுக்கு, அவளின் பெற்றோர்கள் இடத்தில் இருந்து வந்த சொத்து என்றால், அப்பெண் இறக்கும் போது அவளுக்கு குழந்தைகளும் இல்லை என்றால், அச்சொத்தை அவளின் கணவன் அடைய உரிமை இல்லை! அச்சொத்து மீண்டும் பெற்றோர்கள் வீட்டிற்கே சென்று விடும்.
வாரிசு முறைப்படி சொத்துக்களை பெற்று கூட்டாக இருக்கின்ற சொத்துக்களை ஒரே ஒருவர் மட்டும் தன் பிரிவு படாத பங்கை வெளி நபருக்கு உடனேயே விற்றுவிட உரிமை இல்லை. அப்படி விற்க விரும்பினால் முதலில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்க வேண்டும்.

 

தந்தையை கொன்ற மகனுக்கு தந்தையின் சொத்தை பங்கு கேட்டும் உரிமை இல்லை.
கணவன் இறந்த பிறகு அவரின் தந்தை வழியே கிடைக்கும் பூர்வீக சொத்துக்களை விதவை மனைவி வேறு திருமணம் செய்து இருந்தால் அந்த சொத்தில் உரிமை இல்லை.
இந்து மதத்தில் இருந்து மதம் மாறி விட்ட பிறகு இந்து தாத்தா சொத்து வேறு மத பேரன் அடைய உரிமை இல்லை. ஆனால் வேறு மத மகன் அடைய உரிமை உண்டு.
சொத்தை வைத்து இருப்பவர், அவர் உயிருடன் இருக்கும் போதே உயில், செட்டில்மெண்ட் எழுதி இருப்பார் என்றால் அந்த உயில் படியே போய் சேரும். அதில் வாரிசுகளுக்கு உரிமை இல்லை.
மனைவி கார்பமாக இருக்கும் போது கணவன் இறந்தால் கணவனின் சொத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வயிற்றிலேயே இறந்து பிறந்தால் அந்த சொத்தில் அந்த குழந்தைக்கு உரிமை இல்லை.

error: Content is protected !!