செல்வம் பெருக வேண்டுமா?

செல்வம் பெருக வேண்டுமா?

செல்வம் பெருக வேண்டுமா?

மற்றவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல் முன்பு நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உட்பக்கத்தில் மட்டுமே கொடுப்பதும் வாங்குவதும் நிகல வேண்டும்.பணம் பெருக மற்றும்,விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும்.

 

திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது நல்லது.எக்காரணம் கொண்டும் வாசல்நிலை வாசலின்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி கூடைகள் மற்றும் பொருள் வைக்கும் மற்றும் படிப்பதற்கு உபயோகப்படுத்தும் மேஜை இவைகளில் உட்காரக்கூடாது.இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர், உப்பு வீடு விட்டு வெளியே செல்லக்கூடாது.

 

எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.ஆண்கள் விளக்கேற்றக் கூடாது.எக்காரணம் கொண்டும் கிழிந்த ஆடைகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.எந்த உணவு பொருள்களை இல்லத்தின் தரையில் சிந்தக்கூடாது.

 

உணவு உண்ணும் போது சிந்திக்கொண்டு சாப்பிடுவது மற்றும் உணவு உண்டபிறகு மீதம் வைப்பதும் தவறு.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருகவெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்புமற்றும் பாக்கு இல்லாமல் வெற்றிலையை போடக்கூடாது.மேற்கூறிய விசயங்களை தொடர்ந்து ஒரு இல்லத்தில் கடைபிடித்து வரும்போது கட்டாயமாக பணம் சார்ந்த விகழ்வுகளில் தரித்திரம் நீங்கி செல்வவளம் பெருகும்.

 

error: Content is protected !!