செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு

அற்புத வாழ்வளிக்கும் இந்திர வழிபாடு

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு
செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு

 

 

 

 

 

 

 

ஓம் ஐராவதி கஜாரூடம் சகஸ்ராட்சம் சசிபதிம்
வஜ்ராயுத தரம் தேவம் சர்வலோக மஹீபதிம்
ஓம் ஐம் இந்திராணி ஸஹித இந்த்ர பிம்பம் ஆவாகயாமி

எனும் மந்திரத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அடுத்ததாக வில்வம், வன்னி, மாசி பத்ரம், மாவிலங்கம், துளசி ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, புருஷ சூக்த மந்திரங்களால் இந்திரனின் 21 நாமாவளிகளை கூறி, அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் இந்திராய நம:
ஓம் மகேந்திராய நம:
ஓம் தேவேந்திராய நம:
ஓம் விருத்ராதயே நம:
ஓம் பங்கசாசநாய நம:
ஓம் ஐராவத வாகனாய நம:
ஓம் கஜாசன ரூபாய நம:
ஓம் பிடௌஜஸே நம:
ஓம் வஜ்ரபாணயே நம:
ஓம் சகஸ்ராக்ஷ£ய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் சதமகாய நம:
ஓம் டிரந்தராய நம:
ஓம் தேவேசாய நம:
ஓம் சசிபதயே நம:
ஓம் த்ரிலோகேசாய நம:
ஓம் தேவேசாய நம:
ஓம் போகப்ரியாய நம:
ஓம் ஜகத்ப்ரபவே நம:
ஓம் இந்திரலோக வாசினே நம:
ஓம் இந்திராணி சகித இந்திர மூர்த்தியே நம:
நானாவித பரிமள மந்த்ர புஷ்பாணி சமர்ப்பயாமி!

இதன் பின்னர், தூப-தீப நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்தபிறகு, அந்தத் தீபத்தை அக்னி குண்டத்தில் இட்டு, ‘ஓம் இம் இந்திராய நம: அக்னேர் மத்யபாகே ப்ரவேசயோம் ஹீம் பட்’ என்று கூறி (ஹோமத்தில்) நெற்பொரி இட்டு பூஜிக்க வேண்டும்.

தொடர்ந்து, ‘ஓம் ஐம் இந்திராருண்யாச சமாயுக்தம் வஜ்ரபாணிம் ஜகத் பிரபும் இந்திரம் த்யாயேத் துதேவேசம் உத்யோக பதவீம் சித்தயேத்’ என்று தியானித்து, மீண்டும் அக்னியில் நெற்பொரியைப் போட்டு, முக்கிய மூல மந்திரங்களைச் சொல்லி… நெய், நாயுருவி, வெண்கடுகு, புரசு சமித்து, வெற்றிலை, உப்பு, நீரில் நனைத்த கொள்ளு ஆகியவற்றால் அக்னி ஹோமம் செய்து, பூரண ஆகுதியாக தாம்பூலம் இட்டு, யந்திரத்துக்கும் தூப-தீப நிவேதனம் செய்து யாகரட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்ட வேண்டும். பின்னர், ஆத்ம பிரதட்சிணத்துடன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும்.

இந்திர வழிபாட்டில் வெண்தாமரை மலரைப் பயன்படுத்துவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

மேலும்…

ஓம் ஐம் இம் இந்திராய சதமகாய கால சக்ராய இஷ்டிப்ரதாய
கானவிசாரதாய கோசரநிர்மூலாய ஐம் இம்இந்திராய நம:

யாக பூஜைக்கு முக்கியமான இந்த மந்திரத்தை, பூஜைகள் முடிந்த பின்னர் கிழக்கு முகமாக அமர்ந்து, 108 தடவை ஜபிக்க வேண் டும். இதுவே, ஐந்திராஸ்திர மூலமந்திரம் ஆகும். அத்துடன் இந்திர காயத்ரீயை 12 முறை கூறி, ஜபம்- பூஜைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்திர காயத்ரீ:

ஈம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே ஸஹஸ்ராக்ஷ£ய தீமஹி
தந்நோ இந்திர: ப்ரசோதயாத்

தமிழ்ப் பாடல் ஒன்று…

‘திங்களும் குரு தினமும் வருகின்ற ஓர்தினத்தில்
தங்கமும் பவளமும் தரித்த பகுடதாரியை எண்ணி
அக்கினியில் அவன் தாள் நினைத்தாலும் பூசிப்பினும்
இக்கலியில் இந்திர பதவியதும் எட்டுதல் எளிதாமே!”

என்கிறது. இதன்படி உரிய நன்னாளில் தேவேந்திரனை வழிபட்டு, பதவி சுகங்களை அருளும்படி வேண்டி அருள் பெறுவோம்.

error: Content is protected !!