சூரிய திசையில் புத்திபரிகாரங்கள்:

ஆன்மீக ஜோதிட இரகசியம்:

திசாபுத்தி பரிகாரங்கள்:

சூரிய திசையில் சூரிய புத்தி ருத்ர அபிஷேகம் செய்ய வேண்டும்.

சந்திர புத்தியில் துர்கா பூஜை செய்ய வேண்டும்.

செவ்வாய் புத்தியில் முருகருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

ராகு புத்தியில் ஞாயிறு ராகு காலத்தில் காளி வழிபாடு செய்ய வேண்டும்.

குரு புத்தியில் குரு சன்னிதானங்களில் ஆசிர்வாதங்கள் வாங்கவேண்டும்.

சனி புத்தியில் சிவபெருமான் வழிபாடு வைத்துக்கொள்ளவேண்டும்.

புதன் புத்தியில் மகாவிஷ்ணுவை வணங்கவேண்டும்.

கேது புத்தியின் சூரிய வழிபாடு செய்யவேண்டும்.

சுக்கிர புத்தியில் மகாலட்சுமி தாயார் தரிசனம் செய்ய வேண்டும்.

இதனை செய்து வரும் பொழுது அந்தந்த திசாபுத்திகள் கஷ்டங்களை கொடுக்காது.

வாஸ்து இரகசியம்:

செப்டிக் டேங்க் என்கிற கழிவுநீர் தொட்டி எப்பொழுதுமே வடமேற்கு பகுதியில் மட்டுமே வாஸ்து ரீதியாக வரவேண்டும்.காலம்சென்ற எனது ஆத்மார்த்த குருநாதர் மற்றும் நிலக்கடலை எண்ணெய் மில் முதலாளி கெளரு வாஸ்து திருப்பதி ரெட்டி அவர்களின் வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் புத்தகத்தில் தென்கிழக்கு கிழக்கு மத்திய பாகத்தில் கழிவுநீர் தொட்டி வரலாம் என்று சொல்லியிருப்பார்.ஆனால் தயவுசெய்து அதனை பின்பற்றிகழிவுநீர் தொட்டி வேண்டாம் என்பது எனது வாஸ்து அனுபவ கருத்து.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.