
நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், #தை முதல் நாள் தொடங்குகிறது.ஆகவே
நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம் ஆகும்.
தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது #மாதம் தை ஆகும். இம்மாதத்தில் தான் #சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் #உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.
#ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
கடவுள்களுக்கு #நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் மக்கள் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.
#தைப்பொங்கல் :
தை மாதப் பிறப்பு தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் #தமிழர் திருநாள் என்றும் அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது .
மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர்.
சூரியன் வடக்கு #பயணம் செய்வதற்கும் #வாஸ்து ரீதியாக வடக்கு ஒரு இல்லத்தில் வடக்கு பகுதியில் அதிக இடங்கள் இருக்க வேண்டும் என்பதற்கும் மிகமிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பேன்.இதனை காரணமாக வைத்தே நமது முன்னோர்கள் வடக்கு மற்றும் கிழக்கு அதிக இடங்கள் இருந்தால் மட்டுமே சூரிய ஒளி ஒரு இல்லத்தில் விழுந்து சூரிய ஒளி படாத மரம் போல பட்டுப்போகாத வாழ்க்கை ஒரு வீட்டில் வசிப்பவர்களுக்கு கிடைக்கும். இதனாலேயே முன்னோட்டம் வாஸ்து ரீதியாக வடக்கும் கிழக்கும் சந்திக்கக்கூடிய வடகிழக்குப் பகுதியில் வடகிழக்கு பகுதியில் அதிக திறப்புக்கள் இருக்கும் அமைப்பாக ஏற்படுத்தினார்கள்.
மீண்டும் அடுத்த #பண்டிகைகள் சார்ந்த நம்பிக்கை பதிவோடு சந்திப்போம். நன்றி. வணக்கம்.