சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா

நாம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் யாரும் நமக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று நாம் புலம்புகிறோம்.அப்படிப்பட்ட பக்களுக்கான ஒன்று சொல்ல வேண்டும்.

உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.

தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது #வகுப்பு நடத்தினார்களா? #இராணுவம் அமைப்பது எப்படி என்று #நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் #தாரகமந்திரம்.

நமக்கு தெரிந்து நமது குடும்ப பெண்மணிகளுக்கு யாராவது சமயல் கற்று கொடுக்கிறார்களா என்ன? ஒரு சில #பெண்மணிகள் மிக நன்றாகச் சமைப்பார்கள். “சமைப்பது எப்படி?’ என்ற புத்தகத்தை அவர்கள் படித்ததும் இல்லை; அவரது தாயார் அவருக்குச் சமையல் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. நமது #தாய்மார்கள் ஒரு பழமொழியை எப்போதும் கூறுவார்கள் .
“இந்தா பார்… கண் பார்த்ததைக் கை செய்யணும். இதுல கத்துக் குடுக்க என்ன இருக்கு?” என்பார்கள்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை சொல்லிக் கொள்ளவேண்டும். ஒருவர் சொல்லிக் கொடுப்பதால் திறமைசாலியாக ஜொலித்ததைவிட, கற்றுக் கொண்டதால் திறமைசாலியாக ஜொலித்தவர்களே அதிகம்.எனது வாஸ்து பயணத்திற்கு கூட இது பொறுந்தும் . #பெங்களூர் மற்றும் #சென்னை, #மும்பை போன்ற ஊர்களில் பிரபல #வாஸ்து_நிபுணர்கள் மூலமாக வாஸ்து அறிவை வளர்த்து கொள்ள #வாஸ்து_வகுப்பு_பயிற்சிக்காக சென்றாலும்,எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த வாஸ்து அறிவு தான் உயர்ந்தது என்பேன்.ஏட்டு #சுரைக்காய் கறிக்கு பயன்படுமா?அல்லது #சீனி #சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா என்று சொல்ல முடியுமா?அதுபோலதான்.

ஒரு #ஆசிரியர் இருநுறு மாணவர்களுக்கு நாட்டியம் அல்லது ஜோதிடக்கலை மற்றும் வாஸ்து கலை கற்றுத் தந்தால் இருநூறு மாணவர்களும் ஜொலிக்கின்றார்கள? கிராஸ்பிங் என்கிற உள்வாங்குதிறன் – சுயதிறமை மற்றும் உறிஞ்சுதிறன் உள்ளவர்களே உயர உயரப் பறக்கிறார்கள்.அதே மாணவர்கள் அரட்டை அடிக்கும்போது, பயணிக்கும் போது தங்களை வெளியிட, வெளிக்காட்டப் பரபரக்கும் அளவு, சுற்றி நிகழ்வதை, அதன் நுட்பங்களை உள்வாங்குவதில்லை. வெளிக்காட்டும் வேகத்தைத் தவிர்த்து உள்வாங்கும் திறனை அதிகரித்தால் வெற்றி நிச்சயம்.

பிறர் கற்றுத் தந்தால் என்ன என்கிற எதிர்பார்ப்பு சார்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. செயல்திறனைக் குறைக்கிறது. உங்கள் சிந்தனைச் சக்தியைக் குறைக்கிறது.

“சமைத்துப்பார்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு #பெண் #பூரி செய்தார். புத்தகத்தில் போட்டிருந்தபடியே நடந்து கொண்டார்.

“”எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வை.” வைத்தார்.

“”பிசைந்த கோதுமை மாவை உருண்டையாக உருட்டிக் கொள்”. உருட்டிக் கொண்டார்.

“”பலகையில் வைத்து வட்ட வட்டமாக இட்டுக் கொள்”. இட்டுக் கொண்டார்.

“”ஐந்து நிமிடம் கழித்து, வட்டமாக இட்ட பூரியை எண்ணெயில் போடு”. போட்டார்.

பூரி உப்பிக் கொண்டுவரும் என்று புத்தகத்தில் போட்டிருந்தது. ஆனால் பூரி உப்பவேயில்லை.

ஏன்? அடுப்பு பற்றவைக்கவே இல்லை.

ஏன்? அடுப்புப் பற்றவை என்று புத்தகத்தில் போடவேயில்லை. புத்தகத்தில் போடாவிட்டாலும் அடுப்பைப் பற்ற வைக்காமல் சமையல் செய்ய முடியுமா? சமைத்துப்பார் புத்தகத்தில் ஒவ்வொரு ஐட்டங்களின் முன்னாலும் அடுப்பைப் பற்ற வை என்று போடுவார்களா?

எல்லா விஷயங்களையும் கற்றுத் தரமாட்டார்கள். நாமாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.அப்படி கற்று கொண்டவர்களே பறக்கும் பயணம் மேற்கொள்கின்றனர்.இது நமது #பிரதமர் எப்படி பயணப்பட்டு கொண்டு இருக்கின்றாரோ,நமது #தொழிலதிபர் #ரத்தன் டாடா எப்படி பயணப்பட்டு கொண்டு இருக்கின்றாரோ,நான் எனது வாஸ்து பயணமாக #தமிழகம் முழுவதும் எப்படி பயணப்பட்டு கொண்டு இருக்கின்றேனோ அதுபோல எல்லோருக்கும் நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp: 9965021122
www.chennaivasthu.com
youtube: https://www.youtube.com/user/jagannathan6666