சிம்மம் Guru Peyarchi Palangal 2021 – 2022 TAMIL | சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்| Chennai astro

chennai astro vastu

சிம்ம ராசி சார்ந்த 2021-2022 குரு பெயர்ச்சி பலன்கள் என்று பார்க்கும்பொழுது சிம்ம ராசிக்கு என்ன பலன்களை இந்த குருபெயர்ச்சி கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.ருணம் ரோகம் என்று சொல்லக்கூடிய ஆறாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது 7-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். மேலும் இந்த ஏழாம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக உங்களுடைய ராசியை பார்க்கிறார் அந்த வகையில் குரு பார்க்க கோடி நன்மை என்ற வகையில் உங்களுடைய ஆசைகளும் எண்ணங்களும் விருப்பங்களும் அபிலாசைகளும் நிறைவேற்றக்கூடிய ஒரு காலகட்டம் இது என்று சொன்னால் மிகையாகாது. பண நிகழ்வைப் பொருத்தளவில் லாபஸ்தானத்தில் மீது குருவின் பார்வை கிடைக்கின்ற படியாலே பணவரவு என்பது சிறப்பாக இருக்கும். இருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தாலும் பணம் உங்களை தேடி வரக்கூடிய நிகழ்வாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும். சேமிப்பு மற்றும் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் பண்ட் மற்றும் இடம் வாங்குதல், நண்பர்கள் மூலமாக, மனைவி வகையில் சொத்துக்கள் சேரக்கூடிய நிகழ்வு இந்த காலகட்டங்களில் கண்டிப்பாக நடக்கும்.

கொடுத்த கடன் திரும்பி வர கூடிய ஒரு நிகழ்வு இந்த காலகட்டத்தில் நடக்கும் . பூர்வீக சொத்துக்கள் மற்றும், புதிய வீடு கட்டுவதற்கு யோகமான சூழ்நிலையும் இந்த காலகட்டத்தில் இருக்கும். இதுவரையில் குடும்பத்தில், உறவுகளில், நண்பர்கள் சார்ந்த நிகழ்வுகளில் எதிரியாக, பகையாக இருந்த மக்கள் உங்களை தற்போது சமாதானமாகி உங்களை நாடி வருவார்கள். மனைவி கணவன் இடையே நல்ல ஒற்றுமை ஓங்கி சேரும். குழந்தைகள் வகையில் நல்ல பலன்கள் இருக்கும். கல்வி சார்ந்த நிகழ்வுகளில், வெளிநாடு, வெளிமாநிலம் படிப்புக்கு எதிர்பார்த்த கல்வி நிலையங்களில் கிடைக்கக்கூடிய நிகழ்வு இந்த காலகட்டங்களில் நடக்கும். ஆகமொத்தம் அதிஅற்புதமான குரு பெயர்ச்சியாக இந்த பெயர்ச்சி இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது.