Cine Actors Vastu

சினிமா துறைக்கு வாஸ்து தேவையா?vastu shastra for cinema hall

Cine Actors Vastu
Cine Actors Vastu

சினிமா துறைக்கு வாஸ்து தேவையா?

 vastu shastra for cinema hall

நமது ஆதிகால மக்கள் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுக்கு பொழுது போக்கு என்பது இரவு ஆறுமணிக்கு மேலாக தெருகூத்துக்களும்,நாடகங்களும் மட்டுமே இருந்ததுஅதன் மூலமாக தான் நமது புராணங்கள் பிரசித்தி பெற்று காலங்காலமாக நமது சமுதாயம் சிறப்பாக வளர்ந்தது. தாமஸ் ஆல்வா எடிசன் மூலமாக சினிமா கருவி  என்கிற ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சினிமா மட்டுமே இன்று பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அப்படிப்பட்ட திரைப்பட  துறைக்கு வாஸ்து தேவையா என்பது பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.
 
திரைப்பட துறை என்பதில் சின்னத்திரை என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி சார்ந்த துறையும் இணைந்து விடும்..மக்களை  மகிழ்ச்சியாக வைத்திருக்கும் இந்த துறையில் நடிப்பவர்கள் முதலாக அதனை தயாரிக்கும் முதலாளிகள் முதற்கொண்டு அந்த துறையின் தொழில்நுட்ப கலைஞர்கள் முதற்கொண்டு அனைவரின் உழைப்பும் அடங்கி உள்ளது. இதற்கு பிறகு  ஒரு திரைப்படமாக இருந்தால் அதனை திரையிடும் திரையரங்கு வரைக்கும், அல்லது  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி நிலையம் வரை விரிவடைந்து செல்லும். ம
 
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் மட்டுமே அதனைச்சார்ந்த தயாரிப்பாளர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை சிறப்பு பெறுவார்கள்.ஒரு திரைப்படமோ அல்லது ஒரு தொலைக்காட்சி நாடகத்தை தயாரிக்கும் அல்லது ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தும் முதலாளிகள் பணத்தோடு பலமாக வாழ வேண்டும் என்றால் அவர்களின் மேற்கூறிய செயல்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்டாயம் வாஸ்து துணை அவசியம்
 
 ஒரு தொலைக்காட்சி நாடகம் எடுக்கும் இடமோ, அல்லது திரைபடம் புதுபூஜை போடும் இடமோ,அல்லது தொலைக்காட்சி நிலையமோ, மிகச்சிறந்த வாஸ்து அமைப்பு உள்ள இடங்களாக இருக்கும் போது எக்காரணம் கொண்டும் அத்துறையில் உள்ள மக்களை வீழ்ச்சி நிலைக்கு கொண்டு செல்லாது.
 
 ஆக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் சார்ந்த துவக்க நாள் பூஜை என்பது நல்ல வாஸ்து பலம் பொருந்திய இடமாகவோ அல்லது ஸ்டுடியோவாகவோ இருப்பது சிறப்பு.
ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நாடகமோ தொடங்கும் காட்சி என்பது எதிர்மறை செயல் இல்லாத காட்சிகளாக இருக்க வேண்டும். அது வாஸ்து சார்ந்த இயற்கை காட்சிகள் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
 
அதேபோல சினிமா துறை சார்ந்த தயாரிப்பாளர் இல்லம் மற்றும் அந்த துறையில் நடிப்பவர்கள் இல்லங்கள் மிகச்சிறந்த வாஸ்து அமைப்பாக இருக்கும் போது  அவர்களின் துறை சார்ந்த வெற்றி எளிதாக இருக்கும்.
 
திரைப்படதுறையில் இருப்பவர்கள் வெற்றி பெற்ற படங்களை ஆராய்ச்சி செய்து பார்த்தால் அந்த படங்கள் எல்லாமே வாஸ்து சார்ந்த கலைக்கு பொருந்தும் இடங்களாக இருக்கும்.அதாவது மேற்கு மற்றும் தெற்கு மலையுள்ள இடங்களில் அதாவது பொள்ளாச்சி தேன் போன்ற படப்பிடிப்பு நடத்தும் போது அப்படத்தின் வெற்றி என்பது உறுதியாக இருக்கும்.
 
எனது ஆராய்ச்சிப்படி. கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடத்திய அதாவது  வடக்கு மலை உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வெற்றி பெற்ற படங்களின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் எதாவது ஒரு குறைகளை பெற்ற   மனிதராக வாழ்கிறார்கள். அந்த குறைகள் இல்லாமல்  ஒரு சென்டிமென்ட் கணக்கில் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தயாரித்த படங்கள் தோல்விகளை தழுவியுள்ளன.ஆகவே எக்காரணம் கொண்டும் உலகில் எங்கே சென்று படப்பிடிப்பு நடத்தினாலும் வடக்கு மற்றும் கிழக்கு மலை உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
 
திரைப்படம் வெளியிடும் போது நல்ல வாஸ்து பலம் பொறுந்திய திரையரங்குகளில் திரையிடுவது சாலச்சிறந்தது. ஒருசில திரையரங்குகள் ஆபாசம் சார்ந்த படங்கள் மட்டுமே ஓடும். ஒருசில திரையரங்குகளில் வேற்றுமொழி படங்கள் மட்டுமே ஓடும். இதற்கும் வாஸ்துவிற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு.தெற்கு சரிவான அமைப்புகள் உள்ள, மேற்கு சரிவான அமைப்பு உள்ள திரையரங்கில் திரைப்படம் திரையிட தவிர்த்து விடுதல் நலம்பயக்கும்.
 
‌வாஸ்து இடங்களை பின்பற்றி படம் எடுப்பது என்பது கொஞ்சம் அதிக நாட்கள் ஆகும்.இதனால் செலவுகள் அதிகமாக இருக்கும் ஆனால்  வேறு செலவினங்கள் என்பது பெரிதாக கிடையாது. ஆனால் கோடிக்கணக்கான பணத்தை இறைத்து செலவு செய்து படத்தை தயாரித்து அப்படம் நன்றாக ஓடவில்லை எனில் அத்தயாரிப்பாளர் கடனாளி ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
 
‌ஆகவே திரைத்துறையில் இருக்கும் திரைப்பட கலைஞர்கள் மற்றும், திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த துறையில் இருக்கும் மனிதர்கள், கதைவசனம்,மற்றும் பாடலாசிரியர்கள்,ஒளிப்பதிவாளர், இசைத்துறை கலைஞர்கள், நடன இயக்குனர், இப்படி பலவிதமாக திரைப்பட துறையில் இருப்பவர்கள் தங்களின் வீடு வாஸ்து பலம் பொருந்திய அமைப்பாக இருக்கும் போது உங்கள் துறை சார்ந்த வாழ்க்கை பயணம் தோழ்விகளை சந்திக்காது.
‌திரைப்பட வினியோகஸ்தர்கள் தங்களது திரைப்படம் திரையிடும் திரையரங்கு நல்ல வாஸ்து பலம் பொருந்திய அமைப்பாகவும், அவர்கள் இல்லமும் நல்ல வாஸ்து சார்ந்த அமைப்பிலும் இருக்கும் போது அவர்கள் வினியோகம் செய்யும் திரைப்படம் என்றும் பணத்தை இழக்க செய்யும் படமாக இருக்காது.
 
ReplyForward