சிந்தித்து செயல் படுங்கள் வெற்றி பெறுங்கள்

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

குழந்தைகள் ஆகட்டும், பெரியவர்கள் ஆகட்டும், சிந்திக்கின்ற திறன் என்பது அனைவரிடமும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் செக்கில் பூட்டிய மாடுகளைப் போல சுற்றி வராது, உழவுக்கு ஜல்லிக்கட்டுக்கு பயன்படக்கூடிய காளைகள் போல வளம்பெற வேண்டும்.

ஒரு கேள்விக்கு பல விடைகள் இருக்கலாம். ஆனால் அந்த கேள்வியை கேட்ட மனிதன் ஒத்துக் கொண்டால் மட்டுமே அந்த விடை என்பது நிறைவடையும்.

எடுத்துக்காட்டாக பேனாவை பயன்படுத்துவது என்பது பெரும்பான்மையான மக்களிடம் எழுதுவதற்கு என்கிற பதில் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஒரு மாணவி மட்டும் பல கோணங்களில் பதிலைக் கூறினாள்.

அதன் விளக்கம்: எழுதலாம், படங்களை வரையலாம், அவசர மேட்ச் அட்டைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஏப்ரல் மாத முதல் தேதி மை அடிக்கலாம்.  டேபிள் வெயிட்டாக பயன்படுத்தலாம்.  விலை உயர்ந்த பேனாவை மரியாதைக்காக சட்டையில் செருகி வைக்கலாம். பேனாவை வைத்துக் கொண்டு மெத்தப் படித்தவர்களை போல காட்டிக் கொள்ளலாம். புத்தகங்களின் பக்கத்தில் அடையாளம் இடலாம். முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு வைக்கலாம். பென்சில் இல்லாதபோது  வரையலாம். பிறர்மீது மை  அடிக்கிறேன் என பயமுறுத்தலாம். பேனாவை தூக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தலாம். எழுத்துலக அறிஞர்களுக்கு பரிசளிக்கலாம். அலுவலக மேஜையை அலங்கரிக்கலாம். எழுதுவது போல பேனாவை வைத்துக்கொண்டு போட்டோ எடுக்கலாம். பேனா இங்க் மூலம் கைநாட்டு வைக்கலாம். ஆக பல வகையில் பயன்படும் பேனா என்பது, இன்றைக்கு முதலமைச்சர் ஆன பிறகு திரு ஸ்டாலின் அவர்கள் முதல் கையெழுத்து கூட கலைஞர் அவர்கள் எழுதிய பேனாவில் தான் போட்டார்கள். அதேபோல பல கையெழுத்துக்கள் பேனாவின் வழியாகத்தான் நிகழ்கின்றன அது தலை எழுத்துக்களாக மாறுகின்றன. ஆக எந்த ஒரு இடத்தில் இருக்கும் போது, உள்ளங்கையில் கூட தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளலாம்.

இப்படி நம்மை நமக்கு தெரியாமலே பல செயல்களுக்கு பேனாவை பயன்படுத்த முடியும். ஆனால் சட்டென்று கேட்டவுடன் அவற்றை வரிசைப் படுத்த முடியாது. ஆக எந்த ஒரு விஷயத்திலும் நாம் சிந்தித்தோம் என்று சொன்னால்,  சிந்திக்கும் பொழுது எந்த விஷயத்திலும் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். இது பேனாவிற்கு மட்டும் கிடையாது. வாழ்க்கையில் வந்து போகும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உண்டு.