தென் கிழக்கு சமையல் அறை

வாஸ்து அமைப்பில் சமையல் அறை

தென் கிழக்கு சமையல் அறை
தென் கிழக்கு சமையல் அறை

 

 

 

 

 

 

நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து பயணத்தின் அனுபவ கருத்துக்களின் பலவிதமான விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் ஏற்கனவே நமது சமையலறை சார்ந்த பதிவுகளை பார்த்திருக்கிறோம். இன்று சமையலறையில் எந்த விதமான பொருட்களை எங்கு வைக்க வேண்டும் மற்றும் சமையல் செய்யும் திசை சார்ந்த ஒரு கருத்துக்களையும் பார்ப்போம்.

சமையலறையில் உணவு சமைப்பது என்பது பிரதான பணி. அப்பணி என்பது மிகச்சரியான வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.மற்றும் சரியான இடத்திலும் இருக்க வேண்டும்.அந்தவகையில் தென்கிழக்கு சமையலறைக்கு அடுப்பு என்பது தென்கிழக்கு சார்ந்த கிழக்கு பார்த்து சமைக்கும் அமைப்பு வேண்டும். வடமேற்கு சமையலறையில் அந்த அறையின், தென்கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்து சமைக்க வேண்டும். ஒரு சில மக்கள் வடமேற்கு சமையல் அறையில் புகைபோக்கி அமைப்பு ஏற்படுத்துவதற்காக, வடமேற்கில் மேற்கு பார்த்து சமையல் அடுப்பு வைப்பார்கள். அது மிக மிகத் தவறு ஆகும். ஒரு சமையலறையில் சமைக்கக்கூடிய நபர் கிழக்கு பார்த்து சமைத்தால் மிக அற்புதமான அமைப்பாக அமைந்துவிடும். ஒரு சமையலறையில் தெற்கு பார்த்து சமைக்கிறார்கள் என்று சொன்னால், அவ்வீட்டில் பெண்களுக்கு கஷ்டங்களைக் கொடுக்கும். அல்லது சமையல் அறையில் வடக்கு பார்த்து சமைக்கிறார்கள் என்று சொன்னால் கட்டாயமாக பணம் என்பது பற்றாக்குறை சார்ந்த வாழ்க்கை அமையும். மேற்கு பார்த்து சமைப்பது இரண்டாம் தலைமுறை வாரிசுகளுக்கு பாதிப்பினை கொடுக்கும். அடுத்தாக சமையலறையில் பாத்திரங்கள் விலக்க பயன்படுத்தும் இடம் என்பது அந்த அறையின் வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். இது தென்கிழக்கு சமையலறைக்கும் நான் சொல்லக் கூடிய விஷயம் பொருந்தும். இதுவே வடமேற்கு சமையலறையாக இருக்கின்ற பட்சத்தில், வடக்கு சுவற்றில் கிழக்குப் பகுதியில் அமைக்க வேண்டும்.அதாவது வடக்கு பார்த்து பாத்திரங்களை கழுவுவது போன்ற அமைப்பை ஏற்படுத்துவது நல்லது.

அடுத்து சமையலறையில் குளிர்சாதனப் பெட்டி என்பது வடமேற்குப் பகுதியில் வைப்பது சாலச் சிறந்தது. அதற்கு அடுத்த அமைப்பாக தெற்குப்பகுதியில் கிரைண்டர் மற்றும் மிக்ஸி போன்ற வகையறாக்களை வைத்துக்கொள்ளலாம். இந்த விதியை வடமேற்கு சமையலறைக்கும் பொருந்தும்.அதாவது வடமேற்கு அறையில் வடமேற்கில் குளிர்சாதனப் பெட்டி மற்றும், கிரைண்டர் போன்ற பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அதேபோல சமையலறைக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அலமாரிகளை அமைத்து அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. எக்காரணம் கொண்டும் சமையலறையில் மாடங்கள் அமைக்கும் பொழுது அதாவது பாத்திரங்கள் துலக்க மற்றும் அடுப்பை வைக்க மேடை அமைக்கும் பொழுது, மேடையில் அதன் அடிப்பகுதியில் சுவர்களை கட்டுவது மிகப் பெரிய தவறு. இந்த இடத்தில் மிகச் சிறந்த அமைப்பாக பா வடிவில் சமையல் மேடை அமைப்பது சாலச் சிறந்தது.

அதேபோல சமையலறையின் தரைத்தளத்தில் டைல்ஸ் பதிக்கும் பொழுது ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும். ஒரு இடத்தை உயர்த்திய அமைப்பாகவோ, அல்லது தாழ்ந்த அமைப்பாகவோ அமைப்பது மிக மிக தவறானது. ஒரு இல்லத்தில் அனைத்து அறைகளிலும் தரைத்தளம் என்பது உயரம் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும்.இதனை சமையல் அறையில் தவறாக அமைக்க கூடாது.அதாவது பொருள் வைப்பதற்காக ஒரு ஸ்டெப் அமைப்பை ஏற்படுத்தி மேடை போன்ற அமைப்பை ஏற்படுத்துவது தவறானது. நிறைய இல்லங்களில் எனது வாஸ்து பயணத்தில் இதனைப் பார்த்திருக்கின்றேன். மீண்டும் வேறொரு வாஸ்து சார்ந்த கருத்துக்கள் வழியாக சந்திப்போம். நன்றி வணக்கம்.

 

error: Content is protected !!