கொங்கு நாட்டில் கிழமை பிடித்தல்.

ஆன்மீக ரகசியம்:

எங்கள் கொங்கு நாட்டில் இன்றுவரை ஒரு பழக்கம் உண்டு . அதாவது கிழமை பிடித்தல்.அதன் தாத்பர்யம் என்பது அனைவருக்கும் தெரியாது.அதாவது ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பலன்கள் உண்டு. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை நோன்பிருந்து கிழமை பிடிக்கும் பொழுது அரசு மற்றும் தந்தை சம்பந்தப்பட்ட ஆதரவு கிடைக்கும். திங்கட்கிழமை நோன்பிருந்து கிழமை பிடிக்கவே தாய் உறவுகள் பலப்படும். செவ்வாய்க்கிழமை பிடிக்கும் போது, பெண்களுக்கு திருமணமும்,(அதாவது நல்ல மருமகன்) சகோதர ஒற்றுமையும் கிடைக்கும். புதன்கிழமை பிடிக்க நல்ல கல்வி வியாபாரம் செய்தொழில் சிறக்கும். வியாழக்கிழமை கிழமை பிடிக்க பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும். வெள்ளிக்கிழமை பிடிக்க நல்ல மருமகள் கிடைப்பார்கள். சனிக்கிழமை பிடிக்க கண்திருஷ்டி, நோய், எதிரிதொல்லை, பில்லி, சூனியம், செய்வினை விடுபடும். சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை பிடிக்கும்போது மட்டும் கடுமையாகவிரதம் இருக்கவேண்டும்.

வாஸ்து ரகசியம்:

அப்பார்ட்மெண்ட் கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் அவர்களுடைய கட்டிடங்கள் 100% வாஸ்து உள்ளது என்று விளம்பரம் செய்து விற்பனை செய்கின்றனர். அது என்னைப்பொறுத்த அளவில் மிக மிகத் தவறு.அதாவது தென் கிழக்கில் சமையல் அறை, வட கிழக்கில் ஒரு தவறான படுக்கை அறை , தென் மேற்கில் குடும்ப தலைவர் படுக்கையறை, மையப்பகுதியில் வரவேற்பறை, வடமேற்கில் கழிவறை வைத்துக்கொண்டு வாஸ்து என்று சொன்னால் வேடிக்கையான விஷயம். ஒரு அப்பார்ட்மெண்ட் இருக்கின்றது சொன்னால் அந்த மொத்த இடத்திற்கு உச்ச பகுதி, நீச்ச பகுதி , சாலைகள் வரும் பாதை, வடக்கு கிழக்கு திறந்து இருக்கிறதா அல்லது மூடி இருக்கிறதா?. இப்படி பல விஷயங்களை பார்க்கவேண்டும். அப்படி பார்க்காது கட்டும் ஒரு கட்டிடம் வாங்கும் பொழுது,வாங்கும் மக்களின் வாழ்க்கை அவர்களை பார்க்காது இருக்கக் கூடிய சூழ்நிலையை கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992

 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv