கூடாத நட்சத்திரங்கள்:-

கூடாத நட்சத்திரங்கள்:-
கூடாத நட்சத்திரங்கள்:-

 

 

 

 

 

 

“ஆதிரை பரணி கார்த்திகை
ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி
சித்திரை மகம் மீராரும்
மாதனங்கோண்டார் தாரார்
வழி நடைப்பாட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார்
பாம்பின் வாய் தேரை தானே”

விளக்கம்:- பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்பிவராது. பிரயாணம் சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரமாட்டார். வியாதியுடன் படுக்கையில் படுத்தவர் குணம் அடைய மாட்டார் .

இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களும் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு அந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் கெட்டவர்களாக இருப்பதே காரணமாகும். இந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

நட்சத்திரம்….அதி தேவதை…நட்சத்திரம்…அதிதேவதை.
பரணி………………எமன்…………….பூரட்டாதி…….குபேரன்
கார்த்திகை……..அக்கினி……. ….கேட்டை ……இந்திராக்கினி
திருவாதிரை……உத்திரன்………..விசாகம் ……குமரன்
ஆயில்யம்………ஆதிசேஷன்…….சித்திரை …..விஸ்வகர்மா
பூரம் ……………..பார்வதி………….சுவாதி ………வாயு
பூராடம்…………..வருணன் ……….மகம்………….பித்ரு தேவதைகள்.

மேற்கண்ட அதி தேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்கள் ஆதலால் இந்த நட்சத்திரங்கள் அசுப நட்சத்திரங்களாக கருதப் படுகிறது. ஒரு சுப காரியத்திற்கு நாள் குறிக்கும் பொழுது மேற்கண்டவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.