குல தெய்வ வசியம்

குல தெய்வ வசியம்

குல தெய்வத்தை வசியப்படுத்தி

முழு அருளையும் பெற்று நல்வாழ்க்கை வாழ்வது பற்றி பார்ப்போம்.

கீழ்க்கண்ட மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர குலதெய்வங்கள் வசியம் ஆகும்.

ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங்
ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம்
பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் )
சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக .

குல தெய்வம் வசியம் செய்ய பெண் தெய்வங்களாக இருக்கும் போது செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை உகந்தது. ஆண் தெய்வமாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழகிழமை உகந்தது. இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும்

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்து மாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வ ங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்ற ன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வர வேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

error: Content is protected !!