கும்பகோணம் மகாமக திருவிழா

kumbakonam
kumbakonam

கும்பகோணம் மகாமக திருவிழா

கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது.
 மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. 
மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். 

 

இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமான அமைப்பில் உள்ளது.
  உலகம் பிரளயகாலத்தில் அழிந்தபோது சிவபெருமானிடம் படைக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள பிரம்மா சென்று வேண்டினார். அப்போது தனக்கு இனிமேல் வேலை இல்லையா என்று கேட்டபோது, உலகத்தை மீண்டும் படைக்க ஒரு கலச கும்பத்தில் எண்ணற்ற உயிர்களை  அடக்கி அதை பிரலய தண்ணீரில் மிதந்து வரச் செய்தார் சிவபெருமான்.இப்படி கலச கும்பம் மிதந்து வந்தபோது உலகத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் பாணாதுறையில் நின்று ஒரு  பாணத்தை சிவ பெருமானே வேடன் உருவில் எய்துகிறார். 
அந்த அம்பு கலசத்தை தாக்கி அவை உடைந்துபோகிறது. கலசத்தின் ஒரு மூக்கு பகுதி உடைந்த இடம் குடமூக்கு என பெயர் பெற்றது. வேடன் நின்று பாணம் எய்த இடம் பாணபுரீஸ்வரர் கோயிலாக உருவானது. கலசம் உடைந்த பகுதியில் உருவானது ஆதிகும்பேஸ்வரன் கோயில். கலசத்தில் இருந்த புனிதநீர் உடைந்து ஓடிய இடங்களில் உருவானது தான் மகாமக குளம். குளத்தில் அமிர்தங்கள் விழுந்த இடங்களில் 20 புனித கிணறுகள் தோன்றியது. கும்பகோணம் தோன்றியது இவ்வாறு தான் என ஐதீகம்  தெரிவிக்கிறது.

mahamaham,kumbakonam
mahamaham,kumbakonam

 நம்ம தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் வாழ்வில் வளம் சேருங்கள்.உங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்றால் இது போன்ற பதினெட்டு ஆலய திருவிழாக்கள் தமிழகத்தில்  சிறப்பு கட்டாயம்கலந்து கொண்டுவாழ்வில் வளம்பெறுங்கள்.