காலி மனையின் அமைப்பு

காலி மனையின் அமைப்பு

we

 

 

 

 

 

 

 

நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய கட்டுரையில் காலி மனையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒருசில புதிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மனையின் நீள அகலமான 8×8 = 64 அல்லது,9×9=8 என்று சொல்லக்கூடிய வாஸ்து புருஷமண்டல சதுர அமைப்பாக இருக்கும் மனையே எனது வாஸ்து பயணத்தில் எனது அனுபவத்தில் முதல்தரமான மனையாக பாவிக்க படுகிறது. இந்த மனைகளே நன்மைகளை அதிக நன்மைகளை அளிக்க வல்லது. அதாவதுஅனைத்து திசையிலும் சம அளவு இருக்கும் மனைகள் வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதாவது தராசு எப்படி சம அளவாக இருந்தால் மட்டுமே உண்மை அளவோ அதுபோல உண்மை மனையாக செயல்படும்.

ஒரு சதுர அமைப்பில் ஒரு இல்லத்தை சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும் போது அந்தக் குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் அரசியல்வாதிகள், அரசு துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த மனை மற்ற மக்களை விட அதிக பலன்களை கொடுக்கும்.

சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. இது சதுர மனை அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல பலன்களை வழங்கும். இந்த இடத்தில் 50 அடிக்கு 80 அல்லது 50 அடிக்கு 100 அடிகள் அற்புதமான மனைகள் ஆகும். அதாவது நீள-அகலத்தில் எதிரெதிர் அளவுகளாக இருப்பது செவ்வக மனைகளாகும். இந்த மனைகள் சொந்த தொழில் செய்யும் மக்களுக்கு மற்றும் வியாபாரம் கமிஷன் ஏஜென்சி தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

இயற்கையாகவே சதுரம் மற்றும் செவ்வக மனைகளே வாழ்வதற்கு உகந்தது. சர்ப்ப மனை என்று சொல்லக்கூடிய நீளம் அதிகமாகவும், அகல அளவு மிகக்குறைந்த அமைப்பின் படி இருப்பவைகள் தோசங்களை கொடுக்கும். அதாவது நீளம் 100 அடியாகவும், அகலம் வெறும் 15 அடிகளாக இருப்பது வாழ்வியல் இடமாக இருப்பது தவறு.

சர்ப்ப மனைகளில் வாழும் போது, அங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கு உடலின் மத்திய பாகத்தில் மற்றும் உடலின் வெளிப்புற பகுதியில் நோய்கள் போன்ற கஷ்டங்களை கொடுக்கும். ஆகவே, பாம்பு மனை என்று சொல்லக்கூடிய மனை இடங்களில் வீடு கட்டும் எண்ணம் உடையவர்கள், வீடு கட்டுவதற்கு முன்பாக வீடு கட்டும் இடத்தில் சதுர அல்லது செவ்வக அமைப்பாக மாற்றம் செய்த பிறகு வீடு கட்ட வேண்டும். மீதமுள்ள இடத்தை காலியிடமாக விட்டு விடலாம். இதனால் நல்ல பலன்களை பெறமுடியும்.. எனது வாஸ்து பயணத்தில் அதிக நீளமான உள்ள மனைகளில் இரண்டு பக்கமும் சாலைகள் இருக்கும். ஆகவே அதனை இரண்டு மனைகளாக பிரித்து கொள்வதும் நல்ல பலன்களை கொடுக்கும்.

ஆனால் பெங்களூர் மற்றும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மிகவும் அகலம் குறைந்த அளவு உள்ள மனைகளில் தென் வடல் அகலம் குறைவாக இருக்கும் போது வடக்கு பகுதியில் காற்றும், ஒளியும், வராமல் பலம் குறைந்த மனையாகி விடுகிறது. அதேபோல் கிழமேல் அகலத்தில் இருக்கும் மனைகளுக்கு கிழக்கில் இடம் இல்லாமல் போய் விடும் போது,அங்கு உயிர் சக்தியை கொடுக்கும் சக்தி அங்கு மட்டுப்படும். இதனால் இங்கும் நல்ல பலன்களை பெற முடியாது. நான் பயணப்பட்டு எனது அனுபவத்தில் அதுபோன்ற மனைகளில் வசிக்கும் மக்களின் வாரிசுகள் அந்த நகரத்தில் அனைத்து பகுதிகளையும் தெரிந்த நபர்களாக இருப்பதில்லை. அவர்களின் உலகஅறிவு என்பது விருத்தி ஆகாத மனிதர்களாக தான் வாழ்கிறார்கள். அதாவது அடுத்த ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தெருவின் விபரங்களை கூட தெரியாது வாழும் வாழ்க்கையாக அமையும்.

பாம்பு மனையாக உள்ள இடங்களில் நல்ல அமைப்பாக உள்ள மனையாக மாற்றம் செய்தபின் காலியாக இருக்கும் இடத்தில் வாகனம் நிறுத்துவதற்கு உரிய இடமாக மாற்றி விடுவதும் நல்லது. இதன் மூலம் பாம்பு மனையால் ஏற்படும் கெடுதலான பலன்கள் நடக்காது செய்ய முடியும்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

#பணம்_ஈர்க்கும்_பிரபஞ்ச_ரகசியம்
#பிரம்மாண்ட_வெற்றிகள்
#புதுயுகம்_டிவி #நேரம்_நல்ல_நேரம் #Arukkani_jagannathan
#பணம்
#andalvasthu
#Chennaivasthu, #chennaivastu
#செல்வ_ரகசியங்கள்
#vastu, #best_vastu_consultant_in_chennai,
#best_vastu_consultant_in_tamilnadu
#perfectvastu
#tamilnadu_vasthu
#பரிகாரமில்லா_வாஸ்து_தீர்வுகள்
#Vastu_Practitioner_Training #வாஸ்து_பயிற்சி_வகுப்பு #Vasthu_Class
#vastu_tips
#Vastu_program
#vastu_speech
#vastu_house
#செல்வ_வளம்_பெறுக
#பண_ஈர்ப்பு_விதி
#money_attraction
#பணம்_பெறுக
#வாஸ்து_நிபுணர்
#vastu_consultant_in_tamilnadu

மேலும் விபரங்களுக்கு,

மீண்டும் ஒரு அற்புதமான தகவலுடன் சந்திப்போம்.
பிரபஞ்ச சக்திகளுக்கும் இறைசக்திகளுக்கும் இதனைப் படிக்கும் உங்களுக்கும் எனது
அன்புகலந்த நன்றிகளுடன்,

#அருக்காணி #Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

www.chennaivasthu.com

YouTube:

https://www.youtube.com/user/jagannathan6666

error: Content is protected !!