காலபைரவர் வழிபாடு

மிகவும் கஷ்டப்படும் மனிதர்கள் இந்த பூமியில் ஓரிரண்டு மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கு கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றால்ஒருசில வழிபாடு அந்த கஷ்டத்தை நீக்கும். அந்தவகையில் காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு. அப்படிப்பட்ட வழிபாடு என்பது, ஒவ்வொரு நாள் அதிகாலை நாலு முப்பது மணியிலிருந்து 6 மணிக்குள்ளும், மற்றும் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளும் கிலி அங் சூட்சும மந்திரம் மூலமாக தியானித்து வந்தால் எல்லா இடங்களிலும் பைரவர் உங்களுக்கு துணை இருப்பார்.இதற்கு 90 நாட்களில் பலன் தெரியும்.கூடவே கீழுள்ள மந்திரம் சொல்லி வருவதும் சிறப்பு.

ஓம் ஜ்வானத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி.
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவராய தன தான்ய விருத்திகராய சீக்கிரம் ஸ்வர்ணம்
தேஹி !தேஹி !! நமஹ

வாஸ்து இரகசியம்:

தரைத்தளத்தில் ஒரு இல்லம் கட்டி இருக்கின்றார்கள். முன்பு பால்கனி அமைப்பு ஏற்படுத்தி மாடிப்படி அமைப்பார்கள். அதேபோல மாடியிலும் கட்டிடம் கட்டும்பொழுது, முன்பகுதியில் பால்கனி மேலாக கட்டிடம் முன்வைத்து அமைப்பது வாஸ்து தவறு ஆகி விடும். அதாவது முன்பகுதி இழுத்து ஒரு கட்டிடம் கட்டுவது தவறு. தவறான பால்கனி இருந்தாலும் கூட, ஒரு சில இடங்களில் தவறாக இருக்காது. ஆனால் கட்டிடத்தை முன்னோக்கி இழுத்து மேல்தளத்தில் கட்டிடம் கட்டினால் வாஸ்து அமைப்பில் மிகமிகத் தவறு.