கள்ளக்காதல் வாஸ்து

சரியான வாழ்க்கை வழங்கும் காதலா? அல்லது கள்ள காதலா?இதற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

கள்ளக்காதல் வாஸ்து
கள்ளக்காதல் வாஸ்து

ஒருவரின் காதல் என்பது சரியான வாழ்க்கை வழங்கும் காதலா?

அல்லது கள்ள காதலா?இதற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

காதல் செய்யும் மனிதர்கள் அனைவரின் காதல் என்பது திருமணம் வரை செல்கிறதா? காதல் என்பது வாழ்வில் இருதலைமுறைகளையும் கடந்து காதல் வரலாறு படைகின்றதா? எல்லாம் அவரவர் இல்ல வாஸ்து அமைப்புகள் காதலின் வாழ்க்கையில் விதிகளாக விளையாடுகிறது.
கனவுகள் போலவே யாருக்கும் தெரியாமலே கலைந்து போகின்றது ஒரு சில மகளிர் வாழ்க்கையில். அந்த வகையில் காதலித்து ஏமாற்றம் அடையும் பெண்மணிகள் இருக்கின்றார்கள்.
காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள்.
ஹார்மோன் மாற்றத்தாலும், அதன் தூண்டுதலாலும் காதல் என்ற போர்வையில் டீனேஜ் வயது பெண் குழந்தைகள் போலியான நபர்களிடம் தம் வாழ்க்கை பயணத்தை பணயம் வைத்து தொலைகின்றார்கள்.
சரி. ஒருவருக்கு காதல் ஏற்படுவதற்கான வாஸ்து விதிகள் என்ன என்பதனைப்பற்றி பார்ப்போம்.

எதையும் எதிர்பாராமல் நேசிப்பதும்…! எது நடந்தாலும் விட்டு விலகாமல் இருப்பதுமே உண்மையான அன்பு…!! இந்த மாதிரி அமைப்பு என்பது ஒரு இல்லத்தில் வடகிழக்கு விஸ்தாரமாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட வீட்டில் வசிக்கும் மக்களின் காதல் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையின்றி காதல் வாழ்வில் முழு வெற்றி அடைவார்கள்.அதுவும் பெற்றோர் சம்மதம் மூலமாக நடக்கும் காதல் திருமணமாக இருக்கும்..
அதாவது உண்மை காதல் என்பது எதிரெதிர் பாலரின் பொருளாதாரம் அந்தஸ்த்து, தொழில் போன்றவற்றை பொருத்து எப்போதும் வருவதில்லை.
காதலால் அவமானபட்டு வருந்தும் துர்பாக்கிய நிலை யாருக்கு அமையும்.?

வடமேற்கில் பள்ளம் மற்றும் மேடுகள் சார்ந்த தவறுகள் இருக்கும் போது காதல் மூலம் அசிங்கம் அவமானம் உண்டு. அது நிறைவேறாத காதலாக மாறி அவமானம் அடையும் வாழ்க்கை அமையும்.அதாவது காதல் காரணமாக தொழில், பணம், கௌரவம் அனைத்தும் இழந்து நடுதெருவுக்கு வரும் சூழ்நிலையை காட்டும்.

கலவி காதல் என்று சொல்லக்கூடிய
காதல் காதலாக மட்டுமே ஒருசில மனிதர்களுக்கு இருக்கும், ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே, தாம்பதியத்தில் ஈடுபடும் அமைப்பாக இருக்குமே ஒழிய திருமணம் வரை செல்லாது.இதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து ரீதியாக ஆராயும் போது,வடகிழக்கு மூடப்பட்டு மற்றும் தென்மேற்கு பள்ளமான அமைப்பு மற்றும் வடமேற்கில் மேடு போன்ற அமைப்பு இருக்கும் இல்லத்தில் நடக்கும்.
தமிழ் நகைச்சுவை நடிகர் .. ஒருவர் தனது படத்தில், நகைச்சுவை காட்சியில்.. “வசதிக்கு இல்லாட்டினாலும்..! அசதிக்கு வச்சிக்கிறேனு…!!” வசனத்தில் சொல்லுகின்றது போல் காதலன் காதலி ஒரு சில மனிதர்களுக்கு இருப்பார்கள்.காதல் கள்ள காதலாக அமையும். அதாவது ஏற்கனவே திருமணமான வரை ஜாதகர் கள்ள காதல் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
இந்த மாதிரியான ஆசாமிகளின் பேச்சும், பழக்கங்களும் சுயநலம் சார்ந்ததாகவும், பெண் சுகம் அனுபவிப்பதில் குறியாகவும் இருப்பார்கள். இதற்கு காரணம் வீட்டில் தென்மேற்கு குறுகிய அமைப்பாக மாறும் போது நடக்கும்.

ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர் ஒருவர் பால்காரராக நடித்து இருப்பார், அதில் ஒவ்வொரு வீட்டிற்கும் பால் ஊற்றும் போது ஆண்களிடம் சலிப்பாக பேசுவார், பெண்களிடம் சிரித்து பேசுவார்.

இப்படியாக ஒரு பெண்ணிடம் பேசும் போது.. ” என்ன முனியம்மா சவுக்கியமா? என்று கேட்பார்! அந்த பெண் உடனே.. “நானும் என் புருசனும் சவுக்கியம்” என்பார்.. உடனே அந்த நடிகர்.. “அந்த நாய பத்தி எவன் கேட்டான்” என்று பேசுவார். மேற்கூறிய புத்தியை பெற்ற பெண்ணின் வீட்டில் வடகிழக்கு பகுதியில் மருந்துக்கு கூட இடம் இல்லாமல் வடமேற்கு வளர்ச்சி பெற்ற அமைப்பாக இருக்கும். அந்த வீட்டில் வசிக்கும்  பெண்களிடம் இந்த மாதிரியாக பழக கூடிய ரகத்தை  சேர்ந்த ஆண்கள்  பழகக்கூடிய  சூல்நிலையில் இருப்பார்கள்.

ஒருசில இடங்களில் தவறான தென் மேற்கு மேற்கு தெருப்பார்வை வரும் போது கள்ள காதலால் கொலை நடக்கும் செயலைக்கூட செய்ய வைக்கும்.  இந்த கலியுகத்தில் முன்விரோத சண்டையில் நிகழும் கொலைகளைவிட கள்ளகாதல் காராணங்களால் நிகழும் கொலைகள்தான் அதிகமாக இந்தியாவில் நடக்கின்றது.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கட்டுபாட்டில் உள்ளது. ஒவ்வொருவரின் செயல்களும் அவர்கள் அறியாமலே கால சக்கரத்தில் பதிவாகி ஏதாவது ரூபதில் வாஸ்து மூலமாக அம்பலபடுத்தபடும். தண்ணிக்குள்ள காற்று இருந்தால் அது குமிழியாக வெளிப்பட்டே தீரும்.

எனது பயணத்தில் ஏற்பட்ட அனுபவ பதிவு என்னவென்றால், வேலை விசயமாக வெளிநாட்டில் இருக்கிற அப்பாவுக்கு 10 வயது  மகள் போனில் தகவல் கொடுக்கின்றாள். நாங்க எல்லோரும்
தாத்தா-பாட்டி அம்மா தம்பி எல்லோரும் பாய்ல படுத்துகிறோம்… ஆனால்
ஊருல இருந்து அடிக்கடி வந்து போற சித்தபாவுக்கு, பாய் மேல் படுக்காது அம்மா மேல படுத்துகிறாரு…!!!இதற்கு காரணமும் வடமேற்கு வாஸ்து குற்றங்களே ஆகும்.

 
ஆக அறநெறி இல்லறத்தை மீறியவனுக்கு இன்பம் தற்காலிகம் தான். இறுதியில் மானம் இழந்து உயிர் இழக்க வைத்துவிடும்.

ஒரு இல்லத்தில் வடமேற்கு பெரிய தவறுகள் இருக்கும் போது, காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி செல்பவராக இருப்பார்கள். மேலும் சில சமயங்களில் இருவரும் ஏற்கனவே திருமணமானவர்களாகவும் கள்ள காதலர்களாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. வடமேற்கு தவறுகளோடு மூத்த மனிதர்களின் இடமான தென்மேற்கு தவறுகள் சேரும் போது மேற்கூறிய கள்ள தொடர்புகளை ஏற்படுத்தும்.
சமூக ஊடகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பல பெண்களுக்கு காதல் வலை விரித்து உல்லாசம் அனுபவிக்கும் காதல் பிளேபாய்களின் வாழ்க்கை அமைவதற்கு காரணம் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் சமையல் அறைகள் இடம் மாறி இருக்கும் போது கூடவே வடமேற்கு தவறுகள் ஒன்று சேரும் போது பொள்ளாச்சி சம்பவம் போல
ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் காதல் செய்து தன் வலையில் விழ வைப்பார். உண்மை காதல் என்று எண்ணி விளக்கு வெளிச்சத்தில் மாட்டிய விட்டில் பூச்சி போல் கற்பு இழந்த பெண்கள் ஏராளம்.

இந்த கதை இப்படினா ஒருசில ஆண்கள் ஒரு பெண்ணுமே கிடைக்காம ஒத்த மரமாவே திரிவார்கள். ஒரு பெருங் கூட்டத்துக் உள்ளேயும் தனி ஆளாவே இருப்பான். சரி! இந்த மாதிரியான அமைப்புக்கு என்ன காரணம்?என்றால் ஒரு இல்லத்தில் வடமேற்கு இடம் இல்லாமல் இருப்பது மேற்கூறிய செயல்களுக்கு துணை புரியும்.

error: Content is protected !!