கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 | kanni rasi guru peyarchi 2021 to 2022 | astro

2021-2022 குருபெயர்ச்சி என்பது வரிசையில் கன்னிராசி மக்களுக்கான குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம். இதுவரையில் ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது 6-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதுவரை இருந்துவந்த முன்னேற்றம் வருமானம் சார்ந்த விஷயங்களில் தடைகளை கொடுக்கக்கூடிய நிகழ்வாக இதனை எடுத்து கொள்ள வேண்டும். எந்த விஷயங்களையும் ஒரு இழுபறி நிலை, எடுத்த காரியங்கள் எளிதில் முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். இந்த காலகட்டத்தில் அதி அற்புதமான ஒரு விஷயத்தை கொடுக்கின்ற காலமாக இருக்கும் என்று சொன்னால் மனிதர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? மற்றும்  நண்பர்கள் வகையில் சுயநலமாக இருக்கின்ற நண்பர்கள் யார்?. உங்களுக்காக உயிரையும் கொடுக்கும் நண்பர்கள் யார்?.. என்கிற ஒரு விஷயத்தை தெரிந்து கொள்கிற ஒரு நிகழ்வாக இந்த குரு பெயர்ச்சி இருந்து உங்களுக்கு நல்ல பாடத்தை கொடுக்கும்.

பணம் சார்ந்த தொழில் மற்றும் கொடுக்கல் வாங்கல் விசயங்களில் குரு 6ல் இருப்பது சிரமம் என்று சொன்னாலும்கூட, குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பார்வை படுகின்ற படியாலே, தனவரவு என்பது கண்டிப்பாக தொடரும். கடன் சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் கஷ்டங்கள் இருந்தாலும், அதில் வெற்றி என்பது கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் கண்டிப்பாக சிறப்பு கவனம் தேவை. நீங்கள் கடன் கொடுத்த  மனிதர்கள் கடனை திருப்பித் தராமல் காலம் தாழ்த்துவர். இதனால் நீங்கள் வாங்கிய  மனிதர்கள் பணம் திருப்பி கேட்கும் பொழுது உங்களால் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலையை கொடுக்கும்.ஆனால்  குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை கிடைக்கின்ற படியாலே, குடும்பம் சார்ந்த நிகழ்வுகளில் கண்டிப்பாக நல்லதே நடக்கும். தம்பதிகள் சார்ந்த உறவுகளில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டைகள் நடந்தாலும், குருவின் பார்வை படுகின்ற காரணத்தால் நல்லதே நடக்கும் . கல்வி சார்ந்த நிகழ்வுகளில் நீங்கள் நினைக்கிற கல்வி நிலையங்களில் சேரக்கூடிய நிலை என்பது கொஞ்சம் கடினம். ஆகவே போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வு என்கிற விஷயத்தில் போராடித்தான் வெற்றி பெறுகிற ஒரு சூழ்நிலை கிடைக்கும். சில நேரங்களில் அது தோல்வியில் கூட முடியலாம். ஆகவே பொறியியல் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.அதேபோல் மருத்துவம் சார்ந்த நிகழ்வுகளில்,கடன் சார்ந்த நிகழ்வுகளில்,அதாவது ருண ரோக காரணமாக  இறைவழிபாடு என்கிற விசயத்தை,கெட்டியாக பகடித்தால்  கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற முடியும். ஆக மொத்தத்தில் கன்னிராசி மக்கள் இந்த குருப்பெயர்ச்சி முடியும் காலம் வரை, குருபகவான் பணம் மற்றும், உறவுகள் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு கஷ்ட காலத்தை சந்திக்கக்கூடிய நிகழ்வாக இந்த கும்பத்தில் இருக்கும் குரு உங்களுக்குக் கொடுப்பார். மீண்டும் மீனத்திற்கு பெயர்ச்சியாகி செல்லும்போது நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஆனாலும் சத்திய மாமுனி ஆறிலே
இரு காலிலே தளை
பூண்டதும்,அதாவது சத்திய மாமுனிவர் கைகால்களில் தளை பூண்டது என வரலாறு கூறுகிறது. ஆம்  ஆறில் குரு நிற்கும்போது.
நல்ல மனிதனை கெட்டவன் என்று நினைத்து போலீஸ் அரஸ்ட் செய்வதுகூட குரு ஆறில் நிற்கும்போது தான்.ஆகவே எதற்கும், எல்லா விசயங்களிலும் கவனம் என்பது வேண்டும். அப்போது பிரச்சினை என்கிற நிகழ்வு பெரிய பாதிப்பை கொடுக்காது.

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன் சார்ந்த எனது வீடியோவை பார்க்க கிளிக் செய்யுங்கள்