Husband Wife Relationship Troubles

கணவன் மனைவி உறவு

 

கணவன் மனைவி உறவில் பிரியம் பெருக்கும் பழக்கங்கள்!

ஒருவனுக்கு ஒருத்தி…’சொல்லும்போதே காதுகளுக்குள் இனிக்கிறதல்லவா? சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்வு மொத்தமும் அங்கேயே தொடர்ந்தால், மகிழ்ச்சிக்கு அளவென்பது இல்லையல்லவா.? இதற்கான மந்திர சாவி தம்பதியரின் கைகளில்தான் உள்ளது. ‘இவன் எனக்குத்தானே’, ‘இவள் எங்கே போய்விடப்போகிறாள்?’ என்கிற எண்ணத்தில், தனது இணைக்கு சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கான வாய்ப்பை அளிக்கத் தவறும்போது, அந்த உறவே சிக்கலாகிறது.

 

தனது விருப்பம், ஆர்வம் எல்லாவற்றையும் ஒத்த அலைவரிசையில் தன்னைப் புரிந்துகொள்கிற இன்னொருவரிடம் கொட்டத் தொடங்கி, அதுவே ஆழமான நட்பாக வேரூன்றுகிறது. கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் அன்பு கொண்டு எப்பொழுதும் இருக்க , சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.அதனைப்பற்றி பார்ப்போம்.

 

* இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள்.கணவன் தன்நிலையில் இருந்து தொடங்க வேண்டும். ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இப்படி எது பற்றியும் இருக்கலாம்.எதிர்பாராத சந்தோச அணைப்பு, உதடுகள் வழியாக காட்டும் அன்பு சார்ந்த முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள்.ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும்.

 

ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் ஒருவருக்கு நம்பிக்கை பலப்படும்.தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் இது தேவை என்பதால் ஒருவரின் மனநிலைக்கு தகுந்த அமைப்பில் ஒருவருக்கு ஒரு நேரத்தில் தாம்பத்ய உறவு பிடிக்காமல் இருந்தாலும், ஒருவரின் தேவையை நிறைவேற்றுங்கள்.அதாவது தேவையான ஒன்று என்பதால், உணவுகளை எப்படி எடுத்து கொள்கிறோமோ அதுபோல இதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.

 

மனித வாழ்வில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது.ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும்,எல்லை மீறி பழகினாலும், அவை உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். ஒரு காலகட்டத்தில் பிரிவினையை உண்டாகும். இதனால் குடும்ப வாழ்க்கை என்பது சிதைந்து போககக்கூடிய சூல்நிலை ஏற்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரியான வழி எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான மிகப்பெரிய பாதுகாப்பு.காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது.

 

வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள்.கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உதாரணமாக கணவன் தொழிலை முடிந்தால் தோளோடு தோள் நின்று அவர்களின் வேலையில் பங்களிப்பு செய்யுங்கள். இதனால் இருவரும் ஒரே சமநிலையில்உயர உயர பறக்க முடியும்.இதனால் அன்பின் நெருக்கம் அதிகரிக்கும்.பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். ‘நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்’ என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள்.

 

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் பெருங்குடி நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu

 

error: Content is protected !!