கட்டிடவேலை

புதிதாக கட்டும் வீடு பாதியில் நிற்க வாஸ்து காரணமா?

 

கட்டிடவேலை
கட்டிடவேலை

இதற்கு பலகாரணங்களை கூறினாலும் ஒரு சில காரணங்களால் வீட்டு வேலைகள் பாதியில் நின்று விடுகிறது. அந்த வகையில் ஒருசில காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
நல்ல நாளில் பூமி பூஜை போடாதது.
சரியான பிளான் இல்லாதது.
தவறான இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது. தவறான தெருக்குத்து, தெருப்பார்வை உள்ள இடத்தில் ஆரம்பிப்பது.
இயற்கையிலேயே பூமி அமைப்பு உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருப்பது.பக்கத்து வீட்டின் அமைப்புகள், கிணறு, போர், செப்டிக்டேங் போன்றவற்றின் பாதிப்புகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவைகள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வீடு கட்ட ஆரம்பிப்பது.

ஒரு வீட்டின் அருகில் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் 1000 அடிக்குள் தொலைவிற்குள் ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற ஊருக்கு பொதுவான நீர் நிலைகளின் பாதிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது.
உங்களுடைய கட்டிட அமைப்பில் வடகிழக்கு முழுவதும் மூடியும்,
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிட அமைப்பும்,

வடகிழக்கில் படி போன்ற அமைப்புகளும்,
வடக்கை விட தெற்கு அதிக காலியிடமும்,
கிழக்கை விட மேற்கு அதிக காலியிடமும்
என இதுபோன்ற இன்னும் குறிப்பிடும்படியான பல தவறுகள் உண்டு. அதுபோல கட்டிடங்களை நீங்கள் கட்ட முற்படும்போது கூட பாதியில் தடை ஏற்பட்டு நின்றுவிடும்.

நீங்கள் குடியிருக்கும் வீடும், நீங்கள் கட்டக்கூடிய வீடும் இரண்டுமே தவறாக இருக்கும் பட்சத்தில் இருமடங்காக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்

error: Content is protected !!