Vastu Advice For The Selection Of The Plot

கட்டுங்கடங்காத செலவுகள் வாஸ்து

 

Vastu Advice For The Selection Of The Plot
Vastu Advice For The Selection Of The Plot

கட்டுங்கடங்காத செலவுகள் ஏற்பட காரணம் வீட்டின் வாஸ்து காரணமா?..

 

வீட்டில் தவறுகள் இருந்தால் என்னென்ன செலவுகள் ஏற்படும் என்பதனைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.பணம் பத்தும் செய்யும் அல்லது வாழ்க்கை செலவுகளுக்கு பத்தாமல் போகவும் செய்யும் என்று புதுமொழியாகவும் சொல்லலாம்.

மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக முக்கிய பங்கினை வகிப்பது பணம். பணம் சம்பாதிக்க பலவழிகள் இருந்தாலும் அந்த பணத்தை செலவிட ஒருவழியை ஏற்படுத்தி கொண்டால் செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.அந்த ஒருவழியை கொடுப்பது வாஸ்து மட்டுமே என்பேன்.வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பது போல பணம் செலவாவதில் ஏழு வழிகள் இருக்கின்றன. அதனை ஒருவழிக்கு நீங்கள் மாற்றம் செய்தால் பணம் செலவாவதை கட்டுப்படுத்த முடியும்.

ஒருசில மக்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வைத்திய செலவுகள், இன்னும் சிலர் வட்டி மட்டும் கட்டி கொண்டு கடனை அடைக்க வழி தெரியாது இருந்து கொண்டும், , ஒருசிலர் மாத தவணை கட்டுவதற்கும்,தவறான வீட்டை கட்டி, வீட்டு தவனை கட்டியே வாழ்க்கை முடியும் சூல்நிலையை ஏற்று வாழ்கின்றமக்களை எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன். அதன்மூலம் கிடைத்த அனுபவத்தில் ஒருவரின் வீட்டின் அமைப்பை பொருத்தே பணத்தை ஒருவர் செலவிடுவார் என்று தீர்க்கமாக கூறமுடியும்.

ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்கிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் வருமானால் ஏற்படக்கூடிய செலவுகள் பற்றிய விபரத்தை பார்ப்போம்.
ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்கிழக்கு பகுதியில் தவறு இருக்கும்போது அவரின் செலவுகள் நோய்க்காகவும், மருத்துவத்திற்காகவும், செலவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.ஒருவரின் வீட்டின் அமைப்பில் வடகிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் வருமானால்,
திடீர் செலவுகள், காரணமில்லாத செலவுகள், ஒரு வேலையை எளிதாக முடிக்காமல் பலமுறை போராடி முடிக்கும்போது ஏற்படும் வீண் செலவுகள், கண்ணுக்குத்தெரியாத மறைமுக செலவுகள் போன்றவைகள். தவறான இடத்தில் முதலீடு போடுதல் போன்றவைகள், திடீர் மார்க்கெட் சரிவு ஏற்பட்டு பணம் இழப்பு ஏற்படுவது போன்றவைகள் ஏற்படுத்தும்.

ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்மேற்கு பகுதியில் தவறான அமைப்புகள் வரும்போது ஏற்படும் செலவுகள் :

அதிகபடியான கடனுக்கு வட்டிகட்டுதல், மாதத்தவணைகள், கிரெடிட் கார்டு தவணைகள், தவணைக்கு தவறிய வட்டி கட்டுதல்,வீட்டை போக்கியம் அல்லது ஒத்திக்கு விட்டு பணம் கட்ட முடியாது தவிப்பது, கொடுத்த கடன் வசூலிக்க முடியாத நிலை, திடீர் தீ விபத்து ஏற்படுதல் போன்றவைகள் மூலம் அதிக பணச் செலவுகள் ஏற்படக்கூடும்.
ஒருவரின் வீட்டின் அமைப்பில் வடமேற்கு பகுதியில் தவறான அமைப்புகள் வரும்போது
வாகனங்களுக்கு செலவிடுதல்,வாகன தவனை கட்டமுடியாது வாகனத்தை பணம் உதவி செய்தவர் எடுத்து செல்வது, அதிகப்படியான பிரயாணங்களுக்காக செலவிடுதல், ஆடம்பர வாழ்க்கைக்காக செலவிடுதல், லாபமே கொடுக்காத தொழிலில் முதலீடு செய்து தவிப்பது, கூட்டாளியை நம்பி கூட்டுத்தொழில் செய்து ஏமாற்றம் அடைவது,இதனால்மனநலம், உடல்நலம், பொருளாதாரம், ஆன்மிகம், மூடநம்பிக்கை இவைகளை கற்றுக்கொள்வதற்காகவும் பணம் விரையம் செய்து பயணப்படுவது,
ஒருவரின் இல்லத்தின அமைப்பே அவரை மாற்று பாதைக்கு இழுத்து சென்று அவரின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட வைத்து அவரை பல வழிகளில் விரையசெலவுகள் செய்ய வைத்து அவர்களின் வாழ்க்கை விளையாட்டு மைதானம் போல ஆகிவிடுகிறது.