கட்டிடவேலை

கட்டிக்கொண்டு இருக்கும் வீடு பாதியில் நின்று விடுவதற்கு காரணம் என்ன?

கட்டிடவேலை
கட்டிடவேலை

கட்டிக்கொண்டு இருக்கும் வீடு பாதியில் நின்று விடுவதற்கு காரணம் என்ன?

ஒரு தலைமுறையை கடந்து புதிதாக வீடு கட்ட தொடங்குகின்றோம்.அது ஒரு துரதிஷ்டவசமாக ஏதோ ஒரு சூழ்நிலையில் வீட்டு வேலை என்பது பாதியில் நின்று விடுகிறது. இதற்கு காரணம் என்ன என்று பல இடங்களில் எனது ஆராய்ச்சி தொடர்ந்து இருக்கிறது, தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .

 

அந்த வகையில் ஒரு வீடு பாதியில் நின்று விடுவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், அதற்கு பலவித காரணங்களை கூறினாலும், ஓரிரு காரணங்கள் மட்டுமே முன்னிலைப் படுகிறது. எப்படி என்று சொன்னால் ஒரு கர்மா சார்ந்த விஷயமாக வீட்டு வேலை என்பது பாதியில் நின்று விடுவது ஒருவகை.
அடுத்து ஒருவரின் ஜாதக ரீதியாக தற்போது அவருடைய கிரக சூழ்நிலை அதாவது, திசாபுத்தி சார்ந்த விஷயங்கள் ஒரு ஏழு வருடம் முதல் 20 வருடம் வரை, தொடர்ந்து ஒரு பெரிய திசாபுக்தி நடக்கும் போது, பழைய வீட்டிலேயே இருக்கவேண்டும் என்கிற ஒரு நிலை காரணமாக புதிய வீட்டை கட்ட முடியாத சூழ்நிலைக்கு அவரின் வாழ்க்கைச் சூழல் தள்ளப்படுகிறது இது ஒருவகை.
அடுத்ததாக ஒரு நல்ல வீட்டுக்கு செல்லக் கூடிய யோகம் அவர்களுக்கு இல்லாத இருப்பதன் காரணமாகவும்,ஆக கட்டிடம் கட்ட முடியாத ஒரு சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டு அந்த கட்டிட பணி என்பது தடைபடுகிறது .அடுத்த நிலை என்பது இவரின் நேரம் நன்றாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு தவறான அமைப்பில் இல்லத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் அதன் காரணமாக தற்போது இருக்கும் வீடு என்பது ஒரு சில வாஸ்து குற்றங்கள் இருந்தாலும்,அவருடைய வாழ்க்கைச் சூழல் தற்போது என்ன சூழ்நிலையில் இருக்கிறதோ, அந்தச் சூழலை சமாளிக்க கூடிய கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் ஒரு வேலையை செய்து விடுகிறது.
அதாவது வாஸ்து தவறான வீட்டிற்கு செல்ல முடியாத ஒரு நிலை அமைந்து விடுகிறது.
ஒரு வீட்டுவேலை பாதியில் நிற்கிறது என்று சொன்னாலே அவர் வசிக்கும் தற்போதைய இல்லம் வடக்கு மற்றும் கிழக்கு இடமில்லாத அமைப்பாகவும், தெற்கு மேற்கு பள்ளங்களோ அல்லது, அதிக இடங்களாக இருக்கக் கூடிய அமைப்பாக இருக்கின்ற பட்சத்தில், நல்ல வீட்டுக்குச் செல்லக் கூடிய நிலையை அவர்கள் ஏற்கனவே வசிக்கும் வீடுகள் தடுத்துவிடுகிறது. ஆக ஒரு வீடு பாதியில் வேலை செய்யாமல் நிற்கிறது என்று சொன்னாலே, அப்படி கட்டடப் பணி தொடங்கி பாதியில் வேலை முடியாது நிற்கின்ற இடத்தையும், தற்போது அவர்கள் வசித்து வரும் இடத்தினையும் வாஸ்து ரீதியாக ஆராய்ந்து பார்த்து நின்று போன கட்டிடத்தை கட்டத் தொடங்க வேண்டும். அதனை விடுத்து வீட்டுவேலை தொடங்கலாம் என்று சுயமாக முயற்சி செய்தால், மிகப்பெரிய துயர சம்பவங்கள் கூட அந்த இடத்தில் நடந்துவிடும் என்பது உண்மை. ஆகவே எதுவாக இருந்தாலும் ஒரு நல்ல வாஸ்து ஆலோசகரை வைத்துக்கொண்டு நின்றுபோன கட்டிட பணியை செய்வது சாலச் சிறந்தது.
அதுபோக ஒருசில வழிபாடுகளும் ஆலயங்களும் நின்றுபோன கட்டிட பணி தொடங்குவதற்கு துணை புரிகின்றன என்பது உண்மை.
மீண்டும் வேறொரு வாஸ்து சார்ந்த கருத்துக்களை வழியாக சந்திப்போம் நன்றி வணக்கம்

கட்டி கொண்டிருக்கும் வீடு பாதியில் நிற்க என்ன காரணம்

error: Content is protected !!