வாஸ்துபடி கடைகள் அமைப்பில் பண வரவு.
வியாபாரம் செய்யும் கடைகளின் நோக்கம் உற்பத்தி செய்த பொருளை அல்லது, வாங்கிய பொருளை விற்று பணம் பண்ண வேண்டும். ஆகவே நிறைய வாடிக்கையாளர்கள் வந்து செல்ல வேண்டும்.ஆனால் தொழில் நடத்துவதற்கும், வியாபார நடத்துவதற்கும் வாஸ்து படியான இடங்கள் அவசியம் தேவை.ஆனாலும் சில அடிப்படை விதி முறைகளை கடைப்பிடித்து கட்டிடங்களை கட்டிக்கொள்வது போதும்.பேரிய பாதிப்பை தராத குற்றங்கள் இல்லாமல் இருந்தால் போதும்.
ஒரு கடையிலோ அல்லது வியாபாரம் செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் ஒருசில தவறுகள் ஒரு கடையின் வியாபாரத்தில் பாதிப்பை கொடுக்கும்.அதாவது சாலைக்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பள்ளமாக உங்கள் கடைகள் இருக்கும்.அல்லது தரைத்தள அமைப்பாக (underground) உங்களுடைய கடை அமைக்கப்பட்டிருக்கும்.
அல்லது கடைக்கு உண்டான தலைவாசல் வாசலை தவறான பகுதியில் அமைந்திருப்பது, மற்றும்
உங்களுடைய கடை இருக்கும் கட்டிடத்தின் இடத்தில் படி அமைப்பு தவறான இடத்தில் இருப்பது.
வீட்டில் அமைப்பில் ஒரு பகுதியை வியாபாரம் செய்யும் இடமாக பயன்படுத்துவது.
அகலம் குறைவாகவும் நீளம் அதிகமாகவும் இருப்பது.அல்லது ஆயாதி இல்லாத நிலையில் கட்டிடம் இருப்பது.