கடன்_தீர்வதற்கான #வாஸ்து #வழிமுறைகள்:

கடன்_தீர்வதற்கான #வாஸ்து #வழிமுறைகள்:

“#விரலுக்கேத்த_வீக்கம்” என்று நம் #முன்னோர்கள் #கூறுவார்கள். நாம் மற்றவர்களை பார்த்து #பொறாமை கொண்டு அவர்களைப் போல் #செல்வந்தராக வாழ வேண்டும் என்று என்கிறோம். ஆனால் நமது வருமானம் அதற்கேற்ப இருக்காதபொழுது நாம் கடன் வாங்குகின்றோம். நமது வருமானத்திற்கு ஏற்ப கடன் வாங்கலாம், அவ்வாறு செய்யாமல் அதிகமான கடனை வாங்கிவிட்டு அதை எவ்வாறு கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறோம்.

நாம் எப்பொழுதும் மற்றவர்களைப் போல வாழ எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வளர்ச்சி இருக்கும், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமை இருக்கும். நாம் செல்வந்தராக வாழவேண்டும் என்று எண்ணினால் நம் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தோமானால் நம் வளர்ச்சி மேம்படும்.

ஒருவரிடம் கடன் வாங்குவதற்கு முன் நாம் சில கேள்விகளை நம்மிடமே கேட்டுக் கொள்ளவேண்டும்.

1) #ஏன் (ஏன் வாங்க வேண்டும்?)
2) #என்ன (என்ன பலன் கிடைக்கும்?)
3) #எப்படி (எப்படி திருப்பிக் கொடுப்போம்?)

நாம் கடனாளியாக ஆவதற்கும் நம் வீட்டின் வாஸ்துகும் சம்பந்தம் உள்ளது. நாம் வாஸ்து படி சரியாக வீடு அமைக்க வில்லை என்றால் #கடன் தொல்லைகள் வரும், நம்மை கடன் வாங்குவதற்கான சூழலை உருவாக்கும். ஆகையால் நாம் கடனின்றி வாழ்வதற்கு வாஸ்துப்படி எவ்வாறு வீடு அமைக்க வேண்டும் என்பதை காண்போம்.

1) கடன் பிரச்சனைக்கும், #வாஸ்துவிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
2) கடன் சம்பந்தப்பட்ட பகுதி தென்மேற்கு மூலை முக்கிய பங்கு வகிக்கிறது.
3) வாஸ்து படி வடமேற்கு மூலையை சரியாக அமையாவிட்டால் அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
4) கண்டிப்பாக #கிணறு ஆள்துளை கிணறு வடமேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது அவ்வாறு அமைத்தால் கடன் சுமை தலைக்குமேல் ஏறிவிடும். இறுதிவரையிலும் கடனை அடைக்க இயலாமல் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளக் கூடிய துன்பங்கள் நேரிட வாய்ப்பு உண்டு.
5) வடமேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர்றும் மற்றும் வீட்டு சுவறும் கண்டிப்பாக 90 டிகிரியில் அமைத்தல் வேண்டும்.
6) வடமேற்கு பகுதியில் வீட்டினுள் படிக்கட்டு அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் கடன்சுமை ஏறும்.
7) #கழிவுநீர் தொட்டி ஆனது #வடமேற்கு பகுதியில் வீட்டினுள் அமைத்தல் கூடாது.
8) வடமேற்கு பகுதியில் வடக்கில் இருந்து மேற்கு புறமாக ஓடக்கூடிய ஓடை எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் கடன் என்பது சேர்ந்து கொண்டுதான் இருக்கும்.
9) #வடமேற்கில் உள்ள படிக்கட்டின் கீழ் கழிவறை அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் கடன் சுமையை சுமந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.