ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு

வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய #இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு #வெற்றியின்_இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான்.அவன் கண்களை உற்று நோக்கிய #சாக்ரடீஸ், “நாளை காலை என்னை #ஆற்றங்கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.சொன்னபடி மறுநாள் காலை ஆற்றங் கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ்.கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென்று அவனை தண்ணீரில் அமுக்கிப் பிடித்துக் கொண்டார். தடுமாறிப் போன அந்த இளைஞன் காற்றுக்காகவும், தலையை வெளியே எடுக்கவும் போராடினான். நீரிலிருந்து வெளியே வர மிகவும் பிரயத்தனப்பட்டான்.சற்று நேரம் கழித்து அவன் தலையை வெளியே இழுத்த சாக்ரடீஸ் அவன் ஆழ்ந்து மூச்சு விட்டுக் கொள்ளும்வரை காத்திருந்துவிட்டு பிறகு கேட்டார்.“இப்போதைய இந்த சூழலில் எதைப் பெற நீ பெரிதும் போராடினாய்?”“காற்றைப் பெற போராடினேன்” என பதில் சொன்ன அந்த இளைஞனை முழுமையாக விடுவித்து விட்டு புன்னகையுடன் சாக்ரடீஸ் கூறினார்,“

 

 

இதுதான் வெற்றியின் இரகசியம்.”நாம் அடைய வேண்டிய #இலக்குகள் ஒவ்வொன்றையுமே காற்றைப் போல் அவசிய மானவையாய் உயிரைக் காக்க தேவைப்படுபவை யாய் கருத வேண்டும். என்பதைத்தான் மேற்கண்ட நிகழ்ச்சி நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதுமட்டு மின்றி ஒவ்வொரு சம்பவமும் அவரவர் சிந்தனைக்கு ஏற்றாற் போல் வெவ்வேறு படிப்பி னையைத் தரும்.பதுங்கியிருந்து பாய்வதும், பொறுத்திருந்து பெறுவதுவும் போராட்டத்தின் உத்திகள்தான் என்பதை நாம் அறிதல் வேண்டும். எதற்கு பொறுமை தேவை, எதற்கு வேகம் தேவை என்பதில் தெளிவுதான் மிக அவசிய மானவை.உயர்ந்த திறமைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றை மற்றவர் அறிந்து கொள்ளவில்லை, உரிய வகையில் அங்கீ கரிக்கப்படவில்லை என்ற காரணங்களுக்காக நாம் அமைதியாய் இருந்துவிட முடியுமா? அதற்கு என்று காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.உயர உயர மேலேறும் போதுதான் ஊர் நம் கண்களுக்கு தெரிகிறது. நம் சிறகுகளின் வலிமையைப் பொறுத்தே நாம் சிகரங்களுக்கு மேலே பறக்கிறோம்.

 

இறக்கைகளின் சக்தியை அதிகப்படுத்தும் போது ஊரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நம் கண்கள் உலகைப் பார்க்கத் தொடங்குகின்றன.அனுபவ நீரால் அடித்துச் செல்லப்படும் போது கரடுமுரடான கல்லாய் இருந்த நாம் மென்மையான கொழுமான்கற்களாக மாறிவிடுகிறோம்.பொறுமையாய் அடக்கமாய் இருக்கி றார்கள் என்பதற்காக அறிவுகுறைந்தவர்கள் என்றோ, வலிமையற்றவர்கள் என்றோ கருதி எளிதில் அவர்களை வென்றுவிடலாம் என பிறரை யாரும் தவறாக எடைபோட்டுவிடக்கூடாது.பொறுமையும் அடக்கமும் மிக உயர்ந்த பண்புகள். இவற்றை ஒருவர் கைக்கொள்கிறார் என்றால் அவர் அறிவுத்தெளிவு உடையவர் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் ஏதோ பெரிய சாதனைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். பெரிய சாதனைகளை செய்வதற்கு முன் பெரிதும் தேவைப்படுபவை பொறுமையும் அடக்கமும்தான் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.இதனையேஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு.”என்று நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர்.சிறிய மீன்கள் கண்ணெதிரிலேயே நீந்திச் செல்லுகின்ற போதும் மீனுக்காக வந்து ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்கு அவற்றைப் பிடிக்காமல் அமைதியாய் காத்துக் கொண்டிருக்கு மாம். உறுமீனாகிய #பெரிய_மீன் வரும்போது கொத்திக் கொண்டு பறந்துவிடும்.அதுபோல வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள வேண்டும்.

 

மீண்டும் ஒரு அற்புதமான தகவலுடன் சந்திப்போம்.பிரபஞ்ச சக்திகளுக்கும் #இறைசக்திகளுக்கும் இதனைப் படிக்கும் உங்களுக்கும் எனது அன்புகலந்த நன்றிகளுடன்,மேலும் விபரங்களுக்கு,www.chennaivasthu.comஉங்கள்#Arukkani_A_Jagannathan#chennaivastu#chennaivasthuஎன்றும் #வாஸ்துசார்ந்த #சமூக_பணியில்±919965021122+918300021122நடக்க நடக்க பாதை,,நம்பிக்கை தான் வாழ்க்கை.#நல்லதே_நினைப்போம்.#நம்பிக்கையோடுசெயல்படுவோம்.#நலமாக_வாழ்வோமாக.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu

error: Content is protected !!